Published:Updated:

``பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை; நீதிபதிக்குக் கொலை மிரட்டல்!” - திமுக அரசைச் சாடிய ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா

``பொள்ளாச்சி விவகாரத்தில் போராடிய மு.க.ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் போன்றோர் தற்போது நிகழும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக ஏன் வாய் திறப்பதில்லை?” - ஹெச்.ராஜா.

``பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை; நீதிபதிக்குக் கொலை மிரட்டல்!” - திமுக அரசைச் சாடிய ஹெச்.ராஜா

``பொள்ளாச்சி விவகாரத்தில் போராடிய மு.க.ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் போன்றோர் தற்போது நிகழும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக ஏன் வாய் திறப்பதில்லை?” - ஹெச்.ராஜா.

Published:Updated:
ஹெச்.ராஜா

தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணிப் பிரமுகரின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா நேரில் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''ஹிஜாப் விவகாரம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பினர் நீதிபதிக்குக் கொலை மிரட்டல் விடுகின்றனர். ஆனால் அவர்கள்மீது தமிழக அரசு, காவல்துறை நடவடிக்கை எடுக்காதது, சட்டம், ஒழுங்கு சீர்கேட்டின் உச்சகட்டம் ஆகும். நீதிபதிக்கே தமிழகத்தில் கொலை மிரட்டல் விடுப்பதால் இது தமிழ்நாடா அல்லது சுடுகாடா என நீதிபதி ஒருவர் கேட்பதாகக் கூறினார்.‌

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

மதுரை - மேலூரில் உயிரிழந்த 17 வயது சிறுமியின் மரணத்தை காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை. அதன் தொடர்ச்சியாக தற்போது விருதுநகர் மாவட்டத்தில் திமுக பிரமுகர்களால் 22 வயது பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். இதனால் தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டுவருகிறது. பொள்ளாச்சி விவகாரத்தில் போராடிய ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் போன்றோர் தற்போது நிகழும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக ஏன் வாய் திறப்பதில்லை?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தாலே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல் போய்விடுகிறது, சுதந்திரமாக நடமாட முடிவதில்லை. எனவே, மக்கள் வீதிக்கு வந்து போராடி இந்த ஆட்சியைத் தூக்கி எறியும் காலம் விரைவில் வரும். நீதிபதிகளுக்குக் கொலை மிரட்டல், பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் நபர்கள்மீது நடவடிக்கை எடுக்காத முதலமைச்சர் ஸ்டாலின் சுயமரியாதை, ஒழுக்கம் இருந்தால் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

தாலி கட்டாமல் வாழலாம் என்பதற்காகவே தமிழகத்தில் தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன். உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியில் உள்ள விசிக-வுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைத் தர மறுத்து திமுக-வினரே போட்டியிடுகின்றனர். ஆனால் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தற்போது வரை திமுக கூட்டணியிலேயே தொடர்கிறார்.

மாநிலத்தின் உரிமைகளைப் பெறுவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேக்கேதாட்டு விவகாரத்தில் கர்நாடகா அரசு புதிய அணை கட்டுவதற்கு அனுமதி இல்லை என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.‌ எனவே அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். தமிழக பாஜக எப்போதும் தமிழகத்துக்கு ஆதரவாகச் செயல்படும். அதேபோல கேரளாவில் முல்லைப்பெரியாறு அணைக்கு மாற்றாகப் புதிய அணைகட்ட வேண்டும் என அந்த மாநிலத்தினர் பல ஆண்டுகளாகச் சொல்லிவருகின்றனர்.‌ ஆனால் புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி தரப்போவதில்லை'' என்றார்.