Published:Updated:

உள்ளாட்சியில் பெண்களாட்சி: பெண்களால்தான் நல்ல மாற்றங்கள் சாத்தியமாகும்!

உள்ளாட்சியில் பெண்களாட்சி
பிரீமியம் ஸ்டோரி
உள்ளாட்சியில் பெண்களாட்சி

இந்தியாவில் 20 மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு என்பது அமலில் இருக்கிறது.

உள்ளாட்சியில் பெண்களாட்சி: பெண்களால்தான் நல்ல மாற்றங்கள் சாத்தியமாகும்!

இந்தியாவில் 20 மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு என்பது அமலில் இருக்கிறது.

Published:Updated:
உள்ளாட்சியில் பெண்களாட்சி
பிரீமியம் ஸ்டோரி
உள்ளாட்சியில் பெண்களாட்சி

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 21 வயது கல்லூரி மாணவி முதல் 85 வயது மூதாட்டி வரை பெருவாரியாக பெண்கள் வெற்றி பெற்றிருப்பது உள்ளாட்சியில் பெண்களாட்சிக்கான அச்சாரமாக அமைந்திருக்கிறது.

உள்ளாட்சியில் பெண்களாட்சி: பெண்களால்தான் நல்ல மாற்றங்கள் சாத்தியமாகும்!

ஒருபக்கம் பெண்களுக்கு இத்தகைய வாய்ப்புகள் கிடைத்திருப்பதற்கான வரவேற்பையும், மறுபக்கம் அரசியலும் தெரியாமல், உள்ளாட்சி நிர்வாகமும் தெரியாமல் இந்தப் பெண்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது போன்ற விமர்சனங்களையும் பெருவாரியாகப் பார்க்க முடிகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தியாவில் 20 மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு என்பது அமலில் இருக்கிறது. ஏற்கெனவே இருந்த உள்ளாட்சியில் பெண் களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு இருந்ததை மாற்றி, உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு என்பதை 2016-ம் ஆண்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்தார். அதன் அடிப்படையில் இப்போது நடந்து முடிந்த தேர்தலில் அதிக அளவில் பெண்கள் வெற்றிபெற்றிருக்கின்றனர்.

குறிப்பிட்ட ஒரு வார்டு பெண்கள் வார்டாக இருக்கும்பட்சத்தில் ஏற்கெனவே தந்தை, கணவர் என வீட்டில் உள்ள உறவுகள் உள்ளாட்சியில் நின்று வெற்றி பெற்றிருந்தால், அவர்களின் வாரிசுகள் அல்லது குடும்ப உறவு பெண்களைப் போட்டியிட வைப்பார்கள். அப்படி வெற்றிபெற்ற 21 வயது கல்லூரி மாணவி மீது வாரிசு அரசியல் சர்ச்சைகள் எழுந்தன. அந்தப் பெண்ணிடம் காட்சி ஊடகங்களில் கேட்கப்பட்ட கேள்விக்கு `என் கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றுவேன்' என ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுகிறார். தமிழகத் தேர்தல்களில் பணம் அதிகம் உள்ளவர்களுக்கே வாய்ப்பு என்பதற்கு இணங்க, இந்த முறை உள்ளாட்சியிலும் பணம் படைத்தவர்களே அதிகம் வெற்றிபெற்றிருக்கிறார்கள். சில இடங்களில் மட்டுமே தனிமனிதர்கள் தம் செயல்பாடுகளின் அடிப்படையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

`உள்ளாட்சியில்கூட வாரிசுகளை நிறுத்த வேண்டுமா?' என்கிற கேள்வி ஒருபக்கம் இருந்தாலும், வெற்றிபெற்ற 21 வயதுப் பெண் அவர் படிக்கும் கல்லூரியில் உள்ள பெண்களுக்கு ரோல்மாடலாக இருப்பார். அவரைப் பார்த்து மாணவிகள் பெருவாரியாக அரசியல் அறிதலை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

இன்றைக்குப் பெண்களுக்கும் அரசியலுக் கும் தொலைவு என்ற நிலையை சமூக வலைதளங்களிலே பார்க்க முடிகிறது. ஒரு பெண், அரசியல் கருத்துகளை எழுதினால் உடனடியாக அவரை தரக்குறைவாகப்பேசி சமூக ஊடகத்தைவிட்டே விரட்டும் நிலை உள்ளது. அப்படியென்றால் களத்தில் பஞ்சாயத்து தலைவராக, ஊராட்சி மன்றத் தலைவராகப் பெண்கள் அரசியல் செய்வது எவ்வளவு கடினம்? ஆனால், இந்த நிலை மாறும் வகையில் இப்போது தேர்வாகியிருக்கும் பெண்களைப் பார்த்து அதிக அளவில் பெண்கள் அரசியலுக்கு வர வாய்ப்பிருக்கிறது. இப்படி ஒரு மாற்றம்தான் இப்போது அவசியத் தேவை.

ஏற்கெனவே 33 சதவிகித இட ஒதுக்கீட்டில் பெண்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழலாம். அப்போது இன்றைய அளவுக்குப் படித்த பெண்கள் உள்ளாட்சிகளில் போட்டியிட வில்லை. பல கிராமங்களில் பெண்கள் தேர்வானாலும், அவர்களின் வீட்டு ஆண்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். ஊராட்சிக்கு வரும் நிதியை எந்தத் திட்டங்களுக்குச் செலவிட வேண்டும் என்று தேர்வான பெண் தலைவரின் கணவர்தான் தீர்மானித்தார். பெண் கையொப்பம் மட்டுமே இட முடிந்தது. கிராமசபை கூட்டங்களைக்கூட தேர்வான பெண்ணின் கணவரோ, உறவினர்களோ நடத்தும் நிலைதான் இருந்தது. பெண்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை ஆண்கள் விரும்ப மாட்டார்கள் என்பதுதான் பெரும்பாலான கிராமங்களில் நடைமுறையாக இருந்தது.

வெளியில் சென்று வீடு திரும்பும் பெண்களை வீட்டில் இருக்கும் சக பெண்கள் கேவலமாகப் பேசுவதும், தாமதமாக வீடு திரும்பும்போது வீட்டில் உள்ள ஆண்கள் கேள்வி எழுப்புவதும் இதற்கு முன்பு உள்ளாட்சிப் பொறுப்புகளுக்குத் தேர்ந் தெடுக்கப்பட்ட பெண்கள் எதிர்கொண்ட அவலங்கள். தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிக்கு ஏதாவது நன்மை செய்யலாம் என்று நினைக்கும் பெண்களுக்கு முட்டுக் கட்டை போடுவதும், அதையும் மீறி செய்யும் பெண்களுக்கு மிரட்டல் விடுப்பதும் கடந்த காலங்களில் தமிழக உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் அதிகம் எதிர்கொண்ட பிரச்னைகள்தாம்.

உள்ளாட்சியில் பெண்களாட்சி: பெண்களால்தான் நல்ல மாற்றங்கள் சாத்தியமாகும்!
உள்ளாட்சியில் பெண்களாட்சி: பெண்களால்தான் நல்ல மாற்றங்கள் சாத்தியமாகும்!

இதுபோன்ற நிலை தொடரக் கூடாது. குறிப்பாக, பட்டியலினப் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களைத் துளியளவும் அந்தப் பகுதியில் உள்ள மற்ற சாதியினர் மதிக்காத நிலைதான் இருந்தது. இப்போதும்கூட திருச்செந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பிச்சிவிளை கிராமம், பஞ்சாயத்து தலித் வார்டாக ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலைப் புறக்கணித்தனர் அந்தக் கிராம மக்கள். பதிவான 13 வாக்குகளில் 10 வாக்குகள் பெற்று ராஜேஸ்வரி என்ற பெண் தேர்வாகி இருக்கிறார். தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் அந்தப் பெண்ணை தலைவராக அந்த ஊர் மக்கள் ஏற்பார்களா, அவரால் அங்கு சுதந்திரமாகப் பணியாற்ற முடியுமா என்று பல கேள்விகள் எழுகின்றன. 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார் ஒரு பட்டியலின பெண். ஆனால், அந்தப் பெண்ணுக்கு வேலை கொடுத்த முதலாளிதான் தலைவராக ஊரில் வலம் வந்திருக்கிறார்.

இந்த முறை திருநங்கைகள் முதன்முறை யாகத் தமிழகத்தில் தேர்தல் களத்தில் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இந்த மாற்றம் திருநங்கைகள் மீதான மதிப்பீட்டை, மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது. இந்த முறை அதிக எண்ணிக்கையில் எல்லா கிராமங்களிலும் பெண்கள் தேர்வாகி இருப்பதால் கடந்த காலங்களைப் போன்று அல்லாமல் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

உடனடியாக மாற்றங்களைப் பார்க்க முடியாது. கடந்த ஆண்டு, தூய்மை சக்தி மாநாடு என்று குஜராத், உத்தரப்பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பெண் தலைவர்களுக்கான மாநாடு நடைபெற்றது. மத்திய அரசு நடத்திய இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்பாகப் பணியாற்றிய பெண்களுக்கு விருது வழங்கியதோடு, `அதிகாரம்பெற்ற பெண்களால் மட்டுமே அதிகாரம்மிக்க சமூகத்தையும் வலுவான தேசத்தையும் உருவாக்க முடியும்' என்று பேசினார்.

வடமாநிலங்களில் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் தேர்வான பெண்களின் செயல்பாடுகளை அரசு ஆய்வு செய்தது. அவற்றில் மேலே குறிப்பிட்ட அனைத்துப் பிரச்னைகளையும் பெண்கள் எதிர்கொண்டது தெரியவந்தாலும், இரண்டு நம்பிக்கை தரும் விஷயங்களும் கிடைத்தன.

ஊழலற்ற நிர்வாகத்தைப் பெண் தலைவர்கள் செய்கிறார்கள். குடிநீர்க் குழாய் அமைத்தல், கழிப்பறை கட்டுதல் உள்ளிட்ட பெண்கள் தொடர்பான திட்டங்களுக்குப் பெண் தலைவர்கள் முன்னுரிமை அளித்து அதிக அக்கறையுடன் செயல்படுத்துகிறார்கள் என்பதை அந்த ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.

வடமாநிலங்களில் Centre for Catalyzing Change (CCC) போன்ற அமைப்புகள் உள்ளாட்சியில் தேர்வாகும் பெண்களுக்கு மூன்று நாள்கள் பயிற்சி அளிக்கின்றன. இதில் உள்ளாட்சி அமைப்புகளில் நிர்வாகம் தொடர்பான தகவல்கள், திட்டங்கள், தேர்ந்தெடுக்கப்படும் பெண் தலைவருக்கான அதிகாரங்கள், கூட்டம் நடத்தும் முறைகள், பாலின சமத்துவம் மற்றும் சுகாதாரம் தொடர்பான தகவல்கள் போன்றவை அறிவுறுத்தப்படுகின்றன. இதுபோன்ற பயிற்சி எடுத்துக்கொள்ளும் பெண்களின் செயல்பாடுகளில் வித்தியாசத்தை உணர முடிவதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

‘தேர்தலில் நிற்கிறாயா...’ என்று பீகார் பெண்ணான பிரபாவிடம் அவரின் கணவர் கேட்டதற்கு, அன்று வெட்கப்பட்டவர்தான் தேர்தலில் வெற்றிபெற்று, பயிற்சி பெற்று, அந்த ஊருக்கு படுக்கை வசதியுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையத்தைப் பெண்களுக்கென்றே கொண்டு வந்திருக்கிறார். `மறைந்த தந்தைக்கு இறுதிச் சடங்கை ஏன் மகளே செய்யக் கூடாது' என அத்தகைய சூழல் வரும்போது ஊர்க்காரர்களிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

`ஒரு கிராம பஞ்சாயத்தில் 50 சதவிகிதப் பெண்கள் அப்பகுதியிலுள்ள ஒரு மதுக்கடையை மூடவேண்டுமென்று தீர்மானம் இயற்றினால், அது மாவட்ட ஆட்சியரைக் கட்டுப்படுத்தும்' என மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலை இங்கும் வரலாம். பெண்கள் பொறுப்புகளில் இருந்தால்தானே இது சாத்தியமாகும். இத்தகைய மாற்றங்கள் பெண்களிடம் வரும்போது சமுதாயத்தில் பெரும் மாற்றத்தை ஆக்கபூர்வமாக உருவாக்கும்.

அதிக அளவில் படித்த பெண்கள் வெற்றிபெற்றிருப்பதால் இந்த முறை சுயமாக அவர்கள் முடிவெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். சுயேச்சையாக வெற்றி பெற்றவர்கள் தொடங்கி கட்சி பேதமின்றி அனைத்து பெண்களுக்கும் முறையான பயிற்சிகளை அரசே வழங்க வேண்டும். அப்போது பெண்களின் நிர்வாகத்திறனிலும் ஏற்றம் ஏற்படும். உள்ளாட்சியில் இந்த மாற்றத்தைக் காணும்போது சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் 33 சதவிகிதக் குரல் தானாக உயரும். ஏனெனில், `ஒரு பறவை தன் ஓர் இறக்கையை மட்டும் வீசிக்கொண்டு பறக்க முடியாது. பெண்கள் முன்னேறாமல் உலகம் நலமுடன் வாழ வாய்ப்பில்லை' என்ற அழகிய சொல்லாடல் உண்டு. இதை நோக்கி உலக நாடுகள் முன்னேறத் தொடங்கி விட்டன.

நார்வே நாடு, நிறுவனங்கள் சட்டத்தைத் திருத்தி, அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகக் குழுக்களிலும், பெண்களுக்கு 40 சதவிகித இட ஒதுக்கீடு செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் பெரிய நிறுவனங்களின் நிர்வாகக் குழுக்களில், நடப்பாண்டுக்குள் பெண்கள் 40 சதவிகிதம் இருக்கவேண்டுமென வரையறை செய்துள்ளது.

நம்நாட்டிலும் இந்த நிலை வரலாம். இதற்கு உள்ளாட்சி நிர்வாகத்தைப் பெண்கள் அடித்தளமாகக் கருதலாம்!