Published:Updated:

1942... 2022... ஜோடோ யாத்திரையில் இணைந்த `வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் கலந்துகொண்ட மூதாட்டி!

பாரத் ஜோடோ யாத்திரை

``நாங்கள் அப்போது 12 வயதே ஆனவர்கள் என்பதால், அன்று மாலையே எங்களை விட்டுவிட்டார்கள். ஆனால், என் தந்தையும் சகோதரர்களும் மூன்றரை ஆண்டுக்காலம் சிறையில் வைக்கப்பட்டனர்.”

மகாராஷ்டிரா மாநிலம், அகோலா மாவட்டத்திலுள்ள வடேகானில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தற்போது நடைபெற்றுவருகிறது. 1942-ல் நடைபெற்ற `வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் கலந்துகொண்ட லீலாபாய் சிட்டாலே என்ற பெண்மணி, தற்போது பாரத் ஜோடோ யாத்திரையில் இணைந்திருக்கிறார். இந்தக் காணொளியை மூத்த காங்கிரஸ் தலைவரான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

லீலாபாய் சிட்டாலேக்கு தற்போது வயது 93. நேற்று (17-11-22) மகாராஷ்டிரா மாநிலம், அகோலாவில் பாரத் ஜோடோ யாத்திரை நடைபெற்றபோது சிட்டேலே அந்த யாத்திரையில் சிறிது தூரம் இணைந்திருக்கிறார்.

காங்கிரஸின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பகிர்ந்திருக்கும் காணொளியில் சிட்டாலே கூறியிருப்பதாவது, ``நான் ஆகஸ்ட் 9,1942-ல் காந்திஜியின் தலைமையில் நடைபெற்ற `வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் (Quit India movement) , என் இரண்டு நண்பர்களுடன் கலந்துகொண்டேன். அப்போது எனக்கு வயது 12. காந்திஜியின் முழக்கமான `செய், அல்லது செத்து மடி’ ('Do or Die') என்ற வாசகத்தை ஆங்கிலேயருக்கு எதிராக உரக்கச் சொன்னோம். இதனால் கைதுசெய்யப்பட்டோம். ஆனால், நாங்கள் அப்போது 12 வயதே ஆனவர்கள் என்பதால், அன்று மாலையே எங்களை விட்டுவிட்டார்கள். ஆனால், என் தந்தையும் சகோதரர்களும் மூன்றரை ஆண்டுக்காலம் சிறையில் வைக்கப்பட்டனர். நமக்கு இன்று சொல்லப்படும்விதத்தில் அன்று நாட்டுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை.

1942... 2022... ஜோடோ யாத்திரையில் இணைந்த `வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் கலந்துகொண்ட மூதாட்டி!

சமூகத்தின் எல்லா நிலையிலும் இருந்த மக்களும், எல்லா மதத்தினரும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றனர். இப்போது, இந்த பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்கும் மக்கள், நாட்டின் அரசியலமைப்பைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள்" என்றிருக்கிறார்.