Published:Updated:

``அப்பப்பா... புல்லரிக்க வைத்துவிட்டது!''- தேஜஸ் விமான அனுபவத்தால் சிலிர்த்த ராஜ்நாத் சிங்

கடற்படைக்கு என்று தனியாகத் தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானங்கள் பரிசோதிக்கப்பட்டுவருகின்றன.

Rajnath Singh
Rajnath Singh

எல்லோருக்கும் போர் விமானத்தில் பறக்கும் வாய்ப்பு கிடைக்காது. சாதாரணமாகவே, போர் விமானங்கள் மணிக்கு 2,000 கி.மீ வேகத்தில் பறக்கக்கூடியவை. தேஜஸ், மணிக்கு 2,500 கி.மீ வேகத்தில் பறக்கும் திறன்கொண்டது. போர் விமானத்தில் பறப்பதற்கு நல்ல உடல் தகுதி தேவை.

தேஜஸ் விமானங்கள்
தேஜஸ் விமானங்கள்

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று பெங்களூரு ஹெச்.ஏ.எல் விமான நிலையத்தில் தேஜஸ் விமானத்தில் பறந்தார். சுமார் 30 நிமிடங்கள் வானில் பறந்த ராஜ்நாத் சிங், 'அற்புதமான அனுபவம்... புல்லரிக்க வைத்துவிட்டது' என்று தன் பயண அனுபவம்குறித்து ட்வீட் செய்திருந்தார். தேஜஸில் தாம் பயணித்தது பைலட்டுகளை ஊக்கப்படுத்தும் எனவும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

கடற்படைக்கு என்று தனியாகத் தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானங்கள் பரிசோதிக்கப்பட்டுவருகின்றன. தேஜஸ் விமானங்கள், விமானம்தாங்கிக் கப்பல்களில் லேண்ட் ஆகும் முறையான arrested landing, பரிசோதிக்கப்பட்டுவருகிறது.

 arrested landing
arrested landing

விமானம் தாங்கிக் கப்பலில், மின்னல் வேகத்தில் போர் விமானங்கள் வந்து இறங்கும். ரன்வேயில் அதன் வேகத்தை மட்டுப்படுத்த arrested landing முறை பயன்படுகிறது. போர் விமானத்தின் வால் பகுதியில் சிறிய கம்பி ஒன்று நீண்டுகொண்டிருக்கும். கப்பலில் ரன்வேயில் பொருத்தப்பட்டுள்ள இரும்புச் சங்கிலியில், விமானத்தின் வால் பகுதியில் உள்ள இரும்புக் கம்பியில் சிக்கியபடி தரையிறங்கும்.

கடந்த வாரத்தில், கோவாவில் விமானம் தாங்கிக் கப்பலில் தேஜஸ் arrested landing முறையில் வெற்றிகரமாகத் தரையிறக்கி சோதிக்கப்பட்டது. அதனால், தேஜஸ் போர் விமானங்கள் விரைவில் கடற்படையில் இணைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.