Published:Updated:

மோடி ஆவணப்படம்: "மக்கள் எதைப் பார்க்க வேண்டும், கூடாது என அரசு முடிவு செய்யக் கூடாது" மஹுவா மொய்த்ரா

மஹுவா மொய்த்ரா

பிரதமர் நரேந்திர மோடி பற்றிய பி.பி.சி ஆவணப்படத்துக்கான இணைப்புகளை முடக்கியதற்காக, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா மத்திய அரசைக் கண்டித்திருக்கிறார்.

மோடி ஆவணப்படம்: "மக்கள் எதைப் பார்க்க வேண்டும், கூடாது என அரசு முடிவு செய்யக் கூடாது" மஹுவா மொய்த்ரா

பிரதமர் நரேந்திர மோடி பற்றிய பி.பி.சி ஆவணப்படத்துக்கான இணைப்புகளை முடக்கியதற்காக, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா மத்திய அரசைக் கண்டித்திருக்கிறார்.

Published:Updated:
மஹுவா மொய்த்ரா

இங்கிலாந்தின் பிரபல தனியார் ஊடக நிறுவனமான பி.பி.சி, இந்தியாவில் 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் பற்றி ரகசிய விசாரணை நடத்தி ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது. அந்த ஆவணப்படத்தில் கலவரத்தைத் தடுக்கப் போதுமான முயற்சிகளை, அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த தற்போதைய பிரதமர் மோடி மேற்கொள்ளவில்லை எனக் கூறப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஆவணப்பட விவகாரம், பெரும் விவாதப் பொருளாகியிருக்கிறது. `India: The Modi Question' என்ற பெயரில் வெளியான இந்த ஆவணப்படத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர கிளம்பின.

மோடி - பிபிசி
மோடி - பிபிசி

இந்த ஆவணப்படத்துக்கு இந்திய அரசு தடைவிதித்திருக்கிறது. ஆனாலும், இதன் இரண்டாம் பாகம் இன்று வெளியிடப்படும் என பி.பி.சி தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பற்றிய பி.பி.சி ஆவணப்படத்துக்கான இணைப்புகளை முடக்கியதற்காக, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா மத்திய அரசைக் கண்டித்திருக்கிறார். மேலும், ட்விட்டர், யூடியூப் அல்லாமல் வேறு எங்கெல்லாம் இந்த ஆவணப்பட வீடியோவை எடுக்கலாம் என்ற தகவல்களையும் அவர் பகிர்ந்திருக்கிறார்.

இது தொடர்பாக, அந்த வீடியோவைப் பார்ப்பதற்கான தளங்களின் இணைப்புகளை ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் மஹுவா மொய்த்ரா, ``மன்னிக்கவும், மத்திய அரசின் தணிக்கையை ஏற்பதற்காக, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. நல்லதோ... கெட்டதோ... அசிங்கமானதோ அதை மக்களாகிய நாங்கள் முடிவு செய்துகொள்கிறோம். எதைப் பார்க்க வேண்டும் என அரசு முடிவு செய்யக் கூடாது" எனப் பதிவிட்டிருக்கிறார்.