Published:Updated:

``இனி எந்த அரசியல் கட்சியிலும் சேர மாட்டேன்..!'' - யஷ்வந்த் சின்ஹா திட்டவட்டம்

யஷ்வந்த் சின்ஹா ( ட்விட்டர் )

``பொது வாழ்க்கையில் என்ன பங்கு வகிக்க வேண்டும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.'' - யஷ்வந்த் சின்ஹா

``இனி எந்த அரசியல் கட்சியிலும் சேர மாட்டேன்..!'' - யஷ்வந்த் சின்ஹா திட்டவட்டம்

``பொது வாழ்க்கையில் என்ன பங்கு வகிக்க வேண்டும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.'' - யஷ்வந்த் சின்ஹா

Published:Updated:
யஷ்வந்த் சின்ஹா ( ட்விட்டர் )

குடியரசுத் தலைவர் தேர்தல் கடந்த 18-ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட யஷ்வந்த் சின்ஹா தோல்வியைத் தழுவினார். பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றிபெற்றார். அதைத் தொடர்ந்து, இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக கடந்த திங்கள்கிழமை பதவியேற்றார்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட யஷ்வந்த் சின்ஹா, மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னதாக, மார்ச் 2021-ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதற்கு முன்பு அவர் 2018 வரை பா.ஜ.க-வில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யஷ்வந்த் சின்ஹா
யஷ்வந்த் சின்ஹா
ட்விட்டர்

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தல் தோல்வி குறித்துப் பேசிய அவர், `` நான் வேறு எந்தக் கட்சியிலும் சேரப்போவதில்லை. நான் சுதந்திரமாக இருக்கப்போகிறேன். இப்போது எனக்கு 84 வயதாகிறது. எவ்வளவு சுறுசுறுப்பாக இருப்பேன் என்பதை நான் பார்க்க வேண்டும். பொது வாழ்க்கையில் என்ன பங்கு வகிக்க வேண்டும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை'' என்றார்.

மேலும், `திரிணாமுல் தலைமையுடன் தொடர்பில் இருக்கிறீர்களா?' என்ற கேள்விக்கு, ``என்னுடன் யாரும் பேசவில்லை, நானும் யாரிடமும் பேசவில்லை" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!