Published:Updated:

"தமிழின் சிறப்பை பிற பகுதிகள் அறியாதது வருத்தம்; இங்கு பணிபுரிவது ஒரு கற்றல் அனுபவம்" - ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன்

``நான் இப்போது தமிழ் மொழியைக் கற்றுவருகிறேன். தமிழ் செய்தித்தாளை என்னால் சுயமாகப் படிக்கமுடிகிறது. தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள்." - ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் `தமிழ்நாடு - தமிழகம்' கருத்துக்குப் பிறகு அவர்மீதான ஆளுங்கட்சி, அதன் கூட்டணிக் கட்சிகளின் விமர்சனங்களும், அதன் பிறகு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளும் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதன் பின்னர் டெல்லி சென்றுவந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, `தமிழ்நாடு - தமிழகம்' என்ற கருத்துக்கு விளக்கமளித்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்த நிலையில், தமிழ்நாட்டு மக்கள் அடிப்படையில் வேறு என்றும், இங்கு பணியாற்றுவது தனக்கு ஒரு கற்றல் அனுபவம் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறார்.

கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் நேற்று கலந்துரையாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ``உங்கள் பணியில் பல சமயங்களில், நீங்கள் சிக்கல்களை சந்திக்கலாம். உங்கள் பணி பற்றி சிலர் புகார் செய்யலாம். ஆனால் நீங்கள் உறுதியாக இருக்க விரும்பினால், நீங்கள் பணிவாகவும் இருக்க வேண்டும். அப்படி இருப்பதன் மூலம் நீங்கள் வளர்வீர்கள். இந்தப் பதவியை அடைந்திருப்பது விளையாட்டான விஷயமல்ல. உங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டம் சிறியதாக இருந்தால்கூட, அதிலும் சிறப்பான பணியை கொடுங்கள்.

"தமிழின் சிறப்பை பிற பகுதிகள் அறியாதது வருத்தம்; இங்கு பணிபுரிவது ஒரு கற்றல் அனுபவம்" - ஆளுநர் ரவி

நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டிலுள்ள பழங்கால கோயில்கள், ராமேஸ்வரம், மதுரை மீனாட்சியம்மன் கோயில், தஞ்சை கோயில் போன்ற இடங்களுக்குச் சென்றால் அவற்றின் முன்பு கிரேக்க கட்டடக்கலைகூட தோற்கும் எனக் கூறுவீர்கள். அந்த இடங்களின் கலாசாரம், அறிவு எவ்வளவு மகத்தான வளம் வாய்ந்தது என்பதை இது காட்டுகிறது. நான் ஐ.பி.எஸ் பணியில் கேரள பிரிவு அதிகாரியாக இருந்தேன். தமிழ்நாட்டுக்கு நான் ஆளுநராக வந்தபோது, இங்குள்ள மொழி, மக்கள் அடிப்படையில் வேறு என்பதை அறிந்தேன். இங்கு பணியாற்றுவது எனக்கு ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது. நான் அறியாத பல விஷயங்களைத் தெரிந்துகொண்டேன்.

"தமிழின் சிறப்பை பிற பகுதிகள் அறியாதது வருத்தம்; இங்கு பணிபுரிவது ஒரு கற்றல் அனுபவம்" - ஆளுநர் ரவி

நான் இப்போது தமிழ் மொழியைக் கற்றுவருகிறேன். தமிழ் செய்தித்தாளை என்னால் சுயமாகப் படிக்கமுடிகிறது. இது ஓர் அற்புதமான இடம். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள். தமிழ் கலாசாரம் மிகவும் ஆழமானது, வளமானது. தமிழ் மொழி ஏழாயிரம் ஆண்டுகளைக் கடந்து பழைமையானது. தமிழ் இலக்கியம் மிகவும் பழைமையானது. ஆனால், நம் நாட்டின் பிற பகுதிகள், தமிழின் சிறப்பைப் போதுமான அளவு அறியாதது வருத்தமளிக்கிறது" என்றார்.