Published:Updated:

Victory Day : ``வீரர்களின் கையில்தான் ரஷ்யாவின் எதிர்காலமே இருக்கிறது..!"- புதின்

ரஷ்ய அதிபர் புதின் ( ட்விட்டர் )

``மேற்கு நாடுகள் நமக்கு எதிராகத் தீவிரமடைந்திருக்கின்றன. எனவே, நமது வீரர்களுடன் முழு நாடும் இருக்க வேண்டும்." - புதின்

Published:Updated:

Victory Day : ``வீரர்களின் கையில்தான் ரஷ்யாவின் எதிர்காலமே இருக்கிறது..!"- புதின்

``மேற்கு நாடுகள் நமக்கு எதிராகத் தீவிரமடைந்திருக்கின்றன. எனவே, நமது வீரர்களுடன் முழு நாடும் இருக்க வேண்டும்." - புதின்

ரஷ்ய அதிபர் புதின் ( ட்விட்டர் )

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் 15 மாதங்களைக் கடந்த நிலையில், நாஜிகளுக்கு எதிரான ரஷ்யாவின் வெற்றியைக் கொண்டாடும் பாரம்பர்ய சோவியத் பாணி நிகழ்வான `ரெட் ஸ்கொயர் வெற்றி தின அணிவகுப்பு' ரஷ்யாவில் நடைபெற்றது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ``இன்றைய நாகரிகம் மீண்டும் ஒரு தீர்க்கமான திருப்புமுனையில் இருக்கிறது. இதில் வயதான வீரர்கள், `ரஷ்யாவின் உக்ரைன்' எனும் பிரசாரத்தை முன்வைக்கும் வீரர்கள் இருக்கிறார்கள்.

ரெட் ஸ்கொயர் வெற்றி தின அணிவகுப்பு
ரெட் ஸ்கொயர் வெற்றி தின அணிவகுப்பு
ட்விட்டர்

நமது தாய்நாட்டுக்கு எதிராகப் போர் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது. நமது ஆயுதப்படைகளின் வெற்றி உறுதியாக வேண்டும். இந்தப் போர் நாம் வாழ்தலுக்கான முக்கிய அம்சமாக இருக்கிறது. ஏனென்றால் உக்ரேனிய அரசை ஆதரிப்பதன் மூலம் மேற்கு நாடுகள் நமக்கு எதிராகத் தீவிரமடைந்திருக்கின்றன. எனவே, நமது வீரர்களுடன் முழு நாடும் இருக்க வேண்டும்.

இப்போது உங்களுடைய போர் முயற்சியைவிட முக்கியமானது எதுவும் இல்லை. நாட்டின் பாதுகாப்பு இன்று உங்கள்மீதான பொறுப்பாக மாறியிருக்கிறது. நமது நாட்டின் எதிர்காலமும், நமது மக்களும் உங்களை நம்பியிருக்கிறார்கள். மேற்கத்திய நாடுகள் உலகம் முழுவதும் மோதல்கள், சதிகளை விதைத்து போரைத் தூண்டிவிடுகின்றன.

ரஷ்ய அதிபர் புதின்
ரஷ்ய அதிபர் புதின்
ட்விட்டர்

அவர்களின் குறிக்கோள் நமது நாடு வீழ்ச்சியையும், அழிவையும் சந்திக்க வேண்டுமென்பதே. ஆனால், நாம் சர்வதேச பயங்கரவாதத்தை முறியடித்து கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் மக்களைப் பாதுகாப்போம், நமது பாதுகாப்பை உறுதிசெய்வோம்" என்றார்.