Published:Updated:

`உங்களுக்கு அந்தத் திறமை இல்லை ஜெகன்’ - கலைந்த கனவுத் திட்டம்; கொந்தளித்த சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடு
News
சந்திரபாபு நாயுடு

ஆந்திராவின் தலைநகராக அமராவதியை உருவாக்கும் திட்டத்துக்குக் கடன் அளிப்பதாக இருந்த உலக வங்கி, தற்போது தங்கள் திட்டத்திலிருந்து பின்வாங்கியுள்ளது.

ஆந்திரா மாநிலம் கடந்த 2014-ம் ஆண்டு ஆந்திரா, தெலங்கானா என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மாநிலங்கள் பிரிக்கப்பட்டதிலிருந்து 10 ஆண்டுகளுக்கு இந்த இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவாக ஹைதரபாத் தலைநகராக இருக்கும் என்றும் அதற்குள் ஆந்திரா தன் தலைநகரை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

அமராவதி கோயில் வரைபடங்கள்
அமராவதி கோயில் வரைபடங்கள்

அப்போது ஆந்திராவின் முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, ஆந்திராவின் தலைநகராக அமராவதி இருக்கும் என அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டார். அமராவதியை ஸ்மார்ட் சிட்டியாக்கி, அதைப் பிற மாநிலங்கள் பார்த்து வியக்கும் அளவுக்கு அங்கு கட்டடங்களும், சுற்றுலாத்துறையும் மேம்படுத்தப்படும் என அறிவித்து பலரும் ஆச்சர்யப்படும் வண்ணம் அமராவதிக்கான மாதிரி புகைப்படங்களை வெளியிட்டு அடிக்கல் நாட்டினார். புதிய அமராவதியை உருவாக்குவது சந்திரபாபு நாயுடுவுக்கு கனவுத் திட்டமாக இருந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

புதிய தலைநகராக அமராவதியை உருவாக்க ஒரு லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் எனக் கணிக்கப்பட்டது. மத்திய அரசு மூலமாக உலக வங்கியில் இந்திய மதிப்பில் ரூ. 2000 கோடி கடன் வாங்கும் முயற்சிகள் நடைபெற்றன. உலக வங்கியும் கடன் அளிக்கச் சம்மதித்த நிலையில், தற்போது திடீரென ஆந்திராவுக்கு அளித்து வந்த கடன் உதவி நிறுத்தப்பட்டுவிட்டதாக தன் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது உலக வங்கி.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

இது பற்றி உலக வங்கி செய்தித் தொடர்பாளர் சுதீப் மொஸும்தர் என்.டி.டி.விக்கு அளித்துள்ள பேட்டியில், ``அமராவதிக்குக் கடன் பெறுவது தொடர்பான விண்ணப்பத்தை இந்திய நிதித் துறை திரும்பப் பெற்றுக்கொண்டதால் அந்த மாநிலத்துக்கு இனி கடன் வழங்கப்படாது. புதிய அமராவதியை உருவாக்கத் திட்டமிடப்பட்டு பணிகள் ஆரம்ப நிலையிலேயே உள்ளது என அரசு எங்களிடம் தெரிவித்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலக வங்கிக் கடன் தர மறுத்துவிட்டதால் தாங்கள் புதிதாகக் கடன் கேட்டு விண்ணப்பிக்கவுள்ளோம் என ஆந்திராவின் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பாகக் கூறப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஆளும் கட்சியையும், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியையும் கடுமையாக விமர்சித்துள்ளார் சந்திரபாபு நாயுடு. இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், `` ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர்களின் அலட்சியத்தால்தான் உலக வங்கி கடன் தருவதை நிறுத்தியுள்ளது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது முதல் அவர்கள் விவசாயிகளைத் தூண்டிவிட்டு பொய்யாக வழக்கு பதிவு செய்யவைத்தனர். இறுதியாக அவர்கள் அமராவதி திட்டத்தை ஒரே அடியாக நிறுத்திவிட்டனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு ட்வீட்டில்,``ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததிலிருந்து போலவரம் திட்டமும், அமராவதி திட்டமும் முழுமையாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அந்தத் திட்டங்களை முடிப்பதற்கான திறமை அவர்களிடம் இல்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அழிக்க வேண்டும்; அவ்வளவுதான். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் முடிவுகளால், முதலீட்டாளர்கள் பயந்து பின்வாங்குகிறார்கள். மேலும், இளைஞர்களுக்கும் இப்போது வேலையில்லை. இந்த விஷயத்தைப் பற்றிப் பேசினால் அவர்கள் சட்டமன்றத்திலிருந்து ஓடுகிறார்கள். மக்களின் பிரச்னையைப் பார்த்து பயந்து அவர்களே ஓடினால் மக்கள் யாரை நம்புவார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.