Published:Updated:

மகாராஷ்டிரா அரசின் எச்சரிக்கை... அமித் ஷாவுக்கு நன்றி! Y+ பாதுகாப்பில் கங்கனா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத் ( www.instagram.com/team_kangana_ranaut )

இந்தியாவின் மகளான தனக்குப் பாதுகாப்பு வழங்கியதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் கங்கனா.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த ஜூன் 14-ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு, தற்கொலை செய்துகொண்டார் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். அதற்கடுத்த நாளே ``பாலிவுட்டில் வாரிசு முன்னுரிமை அரசியல் (Nepotism) ஆதிக்கம் இருக்கிறது. அதனால்தான் சுஷாந்த் இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டிருக்க வேண்டும்'' என்று குற்றம்சாட்டினார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். இதைத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் முழுவதும் நெப்போடிசம் குறித்த விவாதங்கள் அரங்கேறின.

மீண்டும் ஜூலை 23-ம் தேதி ``கரன் ஜோஹர், ஆதித்யா சோப்ரா, சல்மான்கான் உள்ளிட்டோர் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றனர், அதில் வளர்ந்தவர்கள்தான் ஆலியா பட், டைகர் ஷெராஃப் உள்ளிட்டோர்'' என பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார் நடிகை கங்கனா. இந்தக் குற்றச்சாட்டுக்குப் பின் கங்கனாவுக்கான ஆதரவாளர்கள் ஒருபுறம் அதிகரிக்க, மறுபுறம், ஆலியா பட், கரன் ஜோஹர் ஆகியோர் சமூக வலைதளங்களில் ஏராளமான பின்தொடர்பவர்களை (Followers) இழந்தனர்.

சுஷாந்த்  சிங்
சுஷாந்த் சிங்
சுஷாந்த் தற்கொலை, சயிஃப் அலிகான் மகள்... என்ன தொடர்பு? புதிய தகவல்கள்!

தொடர்ந்து ஆகஸ்ட் 26-ம் தேதியன்று பாலிவுட்டில் போதைப் பழக்கம் இருப்பதாகவும், விலையுயர்ந்த போதைப் பொருள்கள் மும்பையிலுள்ள சிலருடைய வீட்டு பார்ட்டிகளில் இலவசமாகவே கிடைக்கின்றன என்றும் `பகீர்’ தகவல் ஒன்றை வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பினார் கங்கனா. இந்த விஷயத்தில் தான் போதை தடுப்புப் பிரிவுக்கு உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த கங்கனா, `எனக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்’ எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், கங்கனா ரனாவத் உள்ளிட்ட சிலரை, பெயர் குறிப்பிடாமல் போடப்பட்டிருந்த அவதூறுப் பதிவை, மும்பை காவல்துறையின் ஒரு ட்விட்டர் கணக்கு லைக் செய்திருந்தது. இதை ஸ்கிரீன் ஷாட் எடுத்துப் பதிவிட்ட கங்கனா, ``பொதுவெளியில் அவதூறாகப் பேசுவதைக் கண்டிக்காமல், சுஷாந்த்தின் கொலைக்கு எதிராகப் போராடிவருபவர்களை அவதூறாகப் பேசும் கருத்துகளை மும்பை காவல்துறை லைக் செய்திருக்கிறது. இதைவிட மோசமான நிலைக்கு மும்பை காவல்துறை இறங்கிவிட முடியாது” என்று கடுமையாகச் சாடினார்.

சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான `சாம்னா’வில், சிவசேனாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத், கங்கனாவைக் கடுமையாக விமர்சித்து எழுதியிருந்தார். `மும்பையில் வசித்துக்கொண்டே, மும்பை காவல்துறைக்கு எதிராகப் பேசுவது துரோகம்’ என்று எழுதியிருந்தார் சஞ்சய் ராவத். மேலும், கங்கனாவை மீண்டும் மும்பை வர வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

கங்கனா - சுஷாந்த்
கங்கனா - சுஷாந்த்
`சுஷாந்த் கொலைக்கு இதுதான் காரணம்... பாலிவுட்டில் போதைப் பழக்கம்!' - கங்கனா பகீர் தகவல்

மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், ``கங்கனா ரனாவத்துக்கு மும்பை நகரம் பாதுகாப்பானதாக இல்லையென்றால், அவர் இங்கு வசிக்க உரிமை இல்லை. மும்பை காவல்துறை குறித்த அவரின் ஒப்பீட்டுக்குப் பின்னர், அவருக்கு இங்கு வசிக்க உரிமை இல்லை” என்று கூறினார். `மும்பை வர வேண்டாம்’ என்று சிவசேனா கட்சித் தலைவர்கள் கூறிய கருத்துக்கு பதிலளிக்கும்விதமாக, தனது ட்விட்டர் பக்கத்தில் கங்கனா ஒரு பதிவை வெளியிட்டார். அந்தப் பதிவில்...

`பலர் என்னை மும்பை வர வேண்டாம் என்கிறார்கள். அதனாலேயே நான் மும்பை திரும்பத் திட்டமிட்டிருக்கிறேன். வரும் செப்டம்பர் மாதம் 9 -ம் தேதி மும்பை வருகிறேன். மும்பை விமான நிலையம் வந்த பின்னர் நேரத்தையும் வெளியிடுகிறேன். முடிந்தால் என்னைத் தடுத்துப் பாருங்கள்.’
கங்கனா

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதைத் தொடர்ந்து நேற்றைய தினம் வீடியோ பதிவு ஒன்றை தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார் கங்கனா, ``சஞ்சய்-ஜி நான் உங்களைக் கண்டிக்கிறேன், நீங்கள் மட்டுமே மகாராஷ்டிரா அல்ல. நீங்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்யும் மக்களுக்கு அதிகாரம் அளித்திருக்கிறீர்கள். இந்த நாட்டின் மகள்கள் உங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். சிவசேனா தொண்டர்கள் என்ன மிரட்டல் விடுத்தாலும், வரும் 9 -ம் தேதி மும்பைக்கு நிச்சயம் வருவேன். அமீர் கான், நசுருதீன் ஷா உள்ளிட்ட நடிகர்கள் `மும்பையில் வாழ அச்சமாக இருக்கிறது’ என்று சொன்னபோது எதிர்க் கருத்துகள் வரவில்லை. ஆனால், எனக்கு மட்டும் எதிர்ப்புகள் கிளம்புகின்றன'' என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

கங்கனா
கங்கனா

இதையடுத்து,` கங்கனா குறித்து கடுமையான குற்றச்சாட்டுகள் வைத்ததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்பீர்களா?’ என்று சஞ்சய் ராவத்திடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு, ``அந்தப் பெண் (கங்கனா ரனாவத்) மகாராஷ்டிராவிடம் மன்னிப்புக் கேட்டால், நான் அவரிடம் மன்னிப்புக் கேட்பது குறித்து யோசிப்பேன். அவர் (கங்கனா) மும்பையை `ஒரு மினி பாகிஸ்தான்’ என்று அழைக்கிறார். அகமதாபாத்தை அப்படி அழைக்க அவருக்கு தைரியம் இருக்கிறதா?" என்று பதிலளித்திருக்கிறார் சஞ்சய்.

தற்போது இமாச்சலப்பிரதேசம் மணாலியிலுள்ள தன் வீட்டில் தங்கியிருக்கும் கங்கனாவுக்கு பாதுகாப்பு வழங்கியிருப்பதாக அம்மாநில முதல்வர் ஜெய் ராம் தாகூர் கூறியிருந்தார். இந்நிலையில், செப்டம்பர் 9-ம் தேதி மும்பை வரவிருப்பதாகக் கூறியிருந்த கங்கனாவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y+ பாதுகாப்பு வழங்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதைத் தொடர்ந்து இந்தியாவின் மகளான தனக்குப் பாதுகாப்பு வழங்கியதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் கங்கனா.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

Y+ பாதுகாப்பு என்றால் என்ன?

Y+ பிரிவு பாதுகாப்புக் குழுவில் ஆயுதமேந்திய 11 அதிகாரிகள் இருப்பார்கள். அவர்களி ஒன்று அல்லது இரண்டு கமாண்டோக்களும் அடக்கம். மீதமுள்ளவர்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இந்த 11 பேரில் இரண்டு பேர் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளாகச் செயல்படுவார்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு