Published:Updated:

``ஆட்சியர், அமைச்சர்... குடியரசுத் தலைவர் வேட்பாளர்!" - யார் இந்த யஷ்வந்த் சின்ஹா?

யஷ்வந்த் சின்ஹா ( ட்விட்டர் )

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

``ஆட்சியர், அமைச்சர்... குடியரசுத் தலைவர் வேட்பாளர்!" - யார் இந்த யஷ்வந்த் சின்ஹா?

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
யஷ்வந்த் சின்ஹா ( ட்விட்டர் )

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெறவிருப்பதால், அரசியல் கட்சிகள் தேர்தலில் தங்கள் சார்பாக யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்து விவாதித்து வருகின்றன. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர்களாக தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத் பவார், ஃப்ரூக் அப்துல்லா, கோபாலகிருஷ்ண காந்தி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.

ஆனால், இவர்கள் மூவரும் போட்டியிட மறுத்துவிட்ட சூழலில், தற்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

யஷ்வந்த் சின்ஹா
யஷ்வந்த் சின்ஹா

யார் இந்த யஷ்வந்த் சின்ஹா... இவரின் அரசியல் பின்னணி என்ன? என்பது தொடர்பாக சுவாரஸ்யமான தகவல்களை காண்போம்!

1. யஷ்வந்த் சின்ஹா பீகார் மாநிலம் பாட்னாவில் 1937 -ல் பிறந்தார். 1958-ல் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றபிறகு யஷ்வந்த் சின்ஹா, 1960 வரை பாட்னா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

2. அதன்பிறகு குடிமைப் பணிகளுக்கானத் தேர்வில் வெற்றி பெற்று ஆட்சியராக, 24 ஆண்டுக்காலம் பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறார்.

3. 1971 முதல் 1974 வரை ஜெர்மனியில் பான் நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலாளராக யஷ்வந்த் சின்ஹா ​​நியமிக்கப்பட்டார்.

4.பின்னர் 1984-ம் ஆண்டு தனது ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஜனதா கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

5.1988-ல் ராஜ்ய சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989-ல் ஜனதா தளம் கட்சி உருவானபோது அதன் பொதுச்செயலாளராகப் பதவி வகித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமித் ஷா, மோடி
அமித் ஷா, மோடி

6.1990 முதல் 1991 வரை இந்தியாவின் நிதியமைச்சராக சந்திரசேகர் அமைச்சரவையில் பணியாற்றினார்.

7. வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க அரசில் 1998-ல் நிதி அமைச்சராக இருந்த அவர், 2002-ம் ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

8. பின்னர் மோடி, அமித் ஷா ஆகியோரால் பா.ஜ.க-விலிருந்து யஷ்வந்த் சின்ஹா ஓரங்கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாஜக - திரிணாமுல் காங்கிரஸ்
பாஜக - திரிணாமுல் காங்கிரஸ்

9. பின்னர் பா.ஜ.க-விலிருந்து விலகி 2021-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன்பின்னர் அந்தக் கட்சியின் துணைத் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.

10. இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க, இடதுசாரிகள் உள்ளிட்ட 17 எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக, வருகிற ஜூன் 27-ம் தேதி அவர் தன்னுடைய வேட்பு மனுவைத் தாக்கல் செய்வார் எனக் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism