Published:Updated:

`எம்.எல்.ஏ-க்களுடன் `ஜாலி’ கிரிக்கெட்!’ - இது எடியூரப்பா ஆட்டம்!

கலிலுல்லா.ச

கர்நாடகா அரசியலில் பல்வேறு களேபரங்கள் நடந்துவரும் நிலையில், கூலாக சக எம்.எல்.ஏ-க்களுடன் எடியூரப்பா கிரிக்கெட் ஆடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

எடியூரப்பா
எடியூரப்பா ( ANI )

கர்நாடகாவில் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டணியில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் 15 பேர் ராஜினாமா செய்ததால், கர்நாடகா அரசியலில் குழப்பம் நீடித்தது. இது தொடர்பாகத் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அவர்கள் கொடுத்தும் பயனில்லை. ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தை நாடினர்.

கிரிக்கெட் விளையாடும் எடியூரப்பா
கிரிக்கெட் விளையாடும் எடியூரப்பா
ANI

சபாநாயகரை அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் நேரில் சந்திக்க வேண்டும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. எம்.எல்.ஏ-க்களைச் சந்தித்த சபாநாயகர், ``இதில் அரசியல் செய்ய எதுவுமில்லை. அவர்கள் ராஜினாமா கடிதம் முறையாக இல்லை. அதனால்தான் அதைப் பரீசிலிக்கவில்லை. இப்போது கொடுக்கப்பட்டுள்ள கடிதம் குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும்’’ என்றார்.

குமாரசாமிக்கு குட்பை... என்ட்ரியாகும் எடியூரப்பா!

இதனிடையே பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று குமாரசாமி சபாநாயகருக்குக் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற இருக்கிறது. அதே சமயம் உச்ச நீதிமன்றத்தில் எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பும் வழங்கப்பட உள்ளது. நேற்றே வழக்கை விசாரித்த நீதிமன்றம்,`சபாநாயகருக்குத் தாங்கள் உத்தரவிட முடியாது’ என்று கூறிவிட்டது.

குமாரசாமி
குமாரசாமி

இன்றைய தீர்ப்பும் சபாநாயகருக்குச் சாதகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. கர்நாடக அரசியலில் இவ்வளவு களேபரம் நடந்துகொண்டிருக்கும்போது, பெங்களூர் தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களுடன் முன்னாள் முதல்வர் கிரிக்கெட் விளையாடியுள்ளார். அங்கிருந்த மைதானத்தில் சக எம்.எல்.ஏக்களுடன் எடியூரப்பா கிரிக்கெட் விளையாடும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.