Published:Updated:

``பா.ஜ.கவின் உண்மை நிறம் இதுதான்!’’ - ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்த சித்தராமையா

Siddaramaiah ( Twitter/@Siddaramaiah )

மத்திய அரசு, கர்நாடகா பா.ஜ.க, எடியூரப்பா என வரிசையாக, கடுமையாக விமர்சித்து ட்விட் செய்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சித்தராமையா.

``பா.ஜ.கவின் உண்மை நிறம் இதுதான்!’’ - ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்த சித்தராமையா

மத்திய அரசு, கர்நாடகா பா.ஜ.க, எடியூரப்பா என வரிசையாக, கடுமையாக விமர்சித்து ட்விட் செய்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சித்தராமையா.

Published:Updated:
Siddaramaiah ( Twitter/@Siddaramaiah )

கர்நாடகாவில் முன்னதாக நடந்து வந்த காங்கிரஸ்- மஜத ஆட்சி எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவால் முடிவுக்கு வந்தது. தற்போது அதிக பெரும்பான்மை உள்ள பாஜக அங்கு ஆட்சியமைத்துள்ளது. ராஜினாமா செய்த அனைத்து எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக முன்னாள் சபாநாயகர் அறிவித்தார். இதனால் அந்த மாநிலத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Siddaramaiah
Siddaramaiah
Twitter/@Siddaramaiah

இந்நிலையில் கர்நாடகாவின் ஆளும் பா.ஜ.கவையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார் காங்கிரஸின் சித்தராமையா. கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்து வரும் சித்தராமையா ட்வீட் மூலம் அரசை விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``உணர்ச்சிப்பூர்வமான பிரச்னைகளை சுற்றி அரசியல் இருந்தால் வேலையின்மை, வறுமை, கல்வி, பசி போன்ற பிரச்னைகளை யார் தீர்ப்பார்கள்? அரசாங்கத்தின் வேலை அனுதாபம் பெறுவது, விளம்பரம் தேடுவது மற்றும் உணர்ச்சிப்பூர்வமான விஷயங்களில் மக்களை வழிநடத்து போன்றவை அல்ல. ஆனால் மத்திய அரசு மேலே கூறியவற்றைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை

Siddaramaiah
Siddaramaiah
Twitter/@Siddaramaiah

பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார். ஆனால் இந்தியாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடத்தான் அவருக்கு நேரம் இல்லை. வெளிநாடு செல்வது தவிர்க்க முடியாத ஒன்றுதான் ஆனாலும் நாட்டு மக்களின் துயரத்தை அரசு கவனத்தில் கொள்ள வேண்டாமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து, ``வாரத்துக்கு மூன்று நாள் டெல்லிக்குப் பறக்கிறார் எடியூரப்பா. பா.ஜ.க தலைவர் அமித்ஷாவை மீறி எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாத வகையில் உதவியற்ற நிலையில் உள்ளார் எடியூரப்பா. எல்லாவற்றுக்கும் தலைமையிடமிருந்து கட்டளை வரவேண்டும், பா.ஜ.கவின் உண்மையான நிறம் இதுதான்.

கர்நாடகாவில் விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ளது. அதற்குப் பிறகு நிச்சயம் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி முடிவுக்கு வரும். தற்போது நாங்கள் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளோம். எங்களின் எதிர்க்கட்சி பா.ஜ.க தான் மஜத இல்லை. மஜத தலைவர்களுடன் எங்களுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.