Published:Updated:

`இந்தியாவுக்குத் தேவை கம்யூனிசமோ, சோஷியலிசமோ இல்லை; ராம ராஜ்ஜியம்தான்' - சட்டசபையில் யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்
News
யோகி ஆதித்யநாத்

``இந்தியாவுக்குத் தேவை சோஷியலிசமோ, கம்யூனிசமோ அல்ல; ராம ராஜ்ஜியம்தான்!'' - சட்டசபையில் யோகி ஆதித்யநாத் பேச்சு!

2022-ம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. அந்த ஐந்து மாநிலங்களில், உ.பி தேர்தல் களம்தான் ஹைலைட். இந்தியாவிலேயே அதிக சட்டமன்றத் தொகுதிகளைக்கொண்ட உ.பி-யில் பா.ஜ.க., சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் என்று நான்கு கட்சிகள் மோதிக்கொள்கின்றன. சமீபகாலமாக, மேடைப் பிரசாரத்தில் சமாஜ்வாடியும், பா.ஜ.க-வும் மாறி மாறி மோதிக்கொண்டிருந்தன. இந்த நிலையில், சட்டமன்றத்திலேயே சமாஜ்வாடியை சரமாரியாகத் தாக்கிப் பேசியிருக்கிறார் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தற்போதைய உ.பி அரசின் கடைசி சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. அதில், நேற்று (டிச.16), இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது யோகி அரசு. இதைத் தொடர்ந்து பேசிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், ``சோஷியலசம் என்பது மிகப்பெரிய மாயை. இந்தியாவுக்குத் தேவை சோஷியலசமோ, கம்யூனிசமோ அல்ல; ராம ராஜ்ஜியம்தான்! உ.பி-க்கும் ராம ராஜ்ஜியம்தான் தேவை. ராம ராஜ்ஜியம் என்பது நிரந்தரமானது, சூழ்நிலைகளுக்காக மாறாதது. மொத்த பிரபஞ்சத்துக்குமானது'' என்று பேசினார்.

மேலும் பேசிய அவர், ``சோஷியலசத்தின் உண்மையான மதிப்புகளை உணர்ந்த பிரதமர் மோடி, மக்களுக்குக் கழிவறைகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறார். சமாஜ்வாடி செய்த குடும்ப அரசியல், ஊழல் காரணமாக உ.பி வளர்ச்சியடைவேயில்லை. இல்லையென்றால் உ.பி-தான் பொருளாதாரத்தில், இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக இருந்திருக்கும்'' என்று கூறினார். சமாஜ்வாடி எம்.எல்.ஏ-வும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராம் கோவிந்த் செளத்ரியைக் கைகாட்டி, ``அவர் சோஷியலிஸ்டாக இருந்தவர். ஆனால், இப்போது குடும்ப அரசியல் செய்யும் நிறுவனத்தில் இருந்துவருகிறார்'' என்று கூறியதோடு, பா.ஜ.க-வில் இணைந்துகொள்ளுமாறு ராம் கோவிந்துக்கு அழைப்பும் விடுத்தார் யோகி.

ராம் கோவிந்த் செளத்ரி
ராம் கோவிந்த் செளத்ரி
Twitter/@RamGovindChaud

இது குறித்து ராம் கோவிந்த் செளத்ரி, ``பா.ஜ.க., பொய் சொல்வதில் தேர்ந்த கட்சி. நான் என் வாழ்நாள் முழுவதும் அகிலேஷ் யாதவோடு சமாஜ்வாடி கட்சியிலேயே இருப்பேன்'' என்று கூறியிருக்கிறார்.