Published:Updated:

``மாநிலத்தின் சாபக்கேடு நீங்கள்; என் செருப்பளவுக்குக்கூட...!" - பி.டி.ஆர் மீது அண்ணாமலை தாக்கு

அண்ணாமலை| பா.ஜ.க

``பெரிய விமானங்களில் பயணம் செய்யாத எங்களைப் போன்றவர்களும் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்." - அண்ணாமலை

``மாநிலத்தின் சாபக்கேடு நீங்கள்; என் செருப்பளவுக்குக்கூட...!" - பி.டி.ஆர் மீது அண்ணாமலை தாக்கு

``பெரிய விமானங்களில் பயணம் செய்யாத எங்களைப் போன்றவர்களும் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்." - அண்ணாமலை

Published:Updated:
அண்ணாமலை| பா.ஜ.க

ஜம்மு காஷ்மீரில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், தீவிரவாதிகளுக்கெதிரான தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் உட்பட மூன்று இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தாக்குதலில் உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்பும்போது, பா.ஜ.க-வைச் சேர்ந்த சிலர் விமான நிலையத்தில் அவரின் கார்மீது செருப்பை வீசினர். அரசியல் வட்டாரங்களில் இது பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

இந்த நிலையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை, ``நீங்கள் என் செருப்பளவுக்குக்கூட தகுதியில்லாதவர்" எனத் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இது குறித்தான ட்விட்டர் பதிவு ஒன்றில், ``உங்கள் முன்னோர்களின் முதலெழுத்துகளுடன் மட்டுமே வாழும் நீங்களும், உங்களின் கூட்டாளிகளும், சுயமாக உருவாகி பெருமையுடன் விவசாயம் செய்யும் விவசாயியின் மகனை, ஒரு நபராக ஏற்றுக்கொள்ள முடியாதுதான். பெரிய பரம்பரை மற்றும் சில்வர் ஸ்பூனில் பிறந்ததைத் தவிர, இந்தப் பிறவியில் வேறெதாவது பயனுள்ளதைச் செய்திருக்கிறீர்களா?

அண்ணாமலை
அண்ணாமலை

அரசியலுக்கும் எங்கள் மாநிலத்துக்கும் சாபக்கேடு நீங்கள். பெரிய விமானங்களில் பயணம் செய்யாத எங்களைப் போன்றவர்களும் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் இறுதியாக, நீங்கள் என் செருப்பளவுக்குக்கூட தகுதியில்லாதவர். கவலைப்படாதீர்கள், உங்கள் நிலைக்கு நான் ஒருபோதும் இறங்க மாட்டேன்" என அண்ணாமலை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

முன்னதாக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், `அந்தப் பெயரைக்கூட நான் குறிப்பிட விரும்பவில்லை’ என்று பதிவிட்டு, "தீவிரவாத தாக்குதலில் உயிர்நீத்த தியாகியின் உடலைவைத்து விளம்பரம் தேடுவது, தேசியக்கொடி பொருத்தப்பட்டுள்ள கார்மீது காலனி வீச ஏற்பாடு செய்வது, அவதூறு பரப்புவது, அப்பட்டமாகப் பொய் பேசுவது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் நபர் தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு" என மறைமுகமாக அண்ணாமலை பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்திருந்தார். அதில் அண்ணாமலை செய்திகள் அடங்கிய புகைப்படங்களையும் அவர் இணைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.