Published:Updated:

``வரலாற்றை உங்களால் மாற்ற முடியாது; வரலாறு எப்போதும் வரலாறுதான்” -அமித் ஷாவுக்கு நிதிஷ் குமார் பதில்

நிதிஷ் குமார், பீகார் ( Facebook/Nitish Kumar )

``மொழி என்பது வேறு பிரச்னை, ஆனால் அடிப்படை வரலாற்றை உங்களால் மாற்ற முடியாது" என அமித் ஷாவுக்கு நிதிஷ் குமார் பதிலளித்திருக்கிறார்.

பீகார் மாநிலத்தின் முதல்வர் நிதிஷ் குமார், ``மொழி என்பது வேறு பிரச்னை, ஆனால் அடிப்படை வரலாற்றை உங்களால் மாற்ற முடியாது" என மத்திய உள்துறை அமைச்சரின் கருத்துக்கு பதிலளித்திருக்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமீபத்திய புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியொன்றில், ``இந்தியாவிலுள்ள பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் பாண்டியர்கள், சோழர்கள், மௌரியர்கள், குப்தர்கள் போன்ற பல பேரரசுகளைப் புறக்கணித்துவிட்டு, முகலாயர்களின் வரலாற்றை மட்டுமே பதிவுசெய்ய முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நம்மிடமும் பல பேரரசுகள் உள்ளன. வரலாற்றுப் புத்தகங்களை மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரம் இது" எனப் பேசியிருந்தார்.

அமித் ஷா
அமித் ஷா

இந்த நிலையில் அமித் ஷா-வின் பேச்சுக்கு பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் பதிலளித்திருக்கிறார்.

செய்தியாளர் சந்திப்பின்போது, அமித் ஷா-வின் கருத்து குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதிஷ் குமார், ``அப்படியானால் வரலாற்றை நீங்கள் மாற்றுவீர்களா... எனக்குப் புரியவில்லை, அதை எப்படி ஒருவர் மாற்ற முடியும்... வரலாறு என்பது எப்போதும் வரலாறுதான். மொழி என்பது வேறு பிரச்னை. ஆனால், அடிப்படை வரலாற்றை உங்களால் மாற்ற முடியாது" எனக் கூறினார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism