Published:Updated:

அக்னிபத்: ``எங்கும் ஓட முடியாது; மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்!" - காங்கிரஸ் எம்.பி சாடல்

எம்.பி ரேவந்த் ரெட்டி

``அக்னிபத்-ஐ நீங்கள் திரும்பப் பெற வேண்டும். எங்கும் ஓட முடியாது, மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்" - காங்கிரஸ் எம்.பி ரேவந்த் ரெட்டி

அக்னிபத்: ``எங்கும் ஓட முடியாது; மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்!" - காங்கிரஸ் எம்.பி சாடல்

``அக்னிபத்-ஐ நீங்கள் திரும்பப் பெற வேண்டும். எங்கும் ஓட முடியாது, மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்" - காங்கிரஸ் எம்.பி ரேவந்த் ரெட்டி

Published:Updated:
எம்.பி ரேவந்த் ரெட்டி

ஜூன் 14 அன்று மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய ராணுவ ஆள் சேர்ப்பு திட்டமான அக்னிபத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டங்கள் நடத்திவருகின்றனர். அரசியல் கட்சியினரும் இந்தத் திட்டத்தை திரும்பப் பெறக் கோரி மத்திய அரசை வலியுறுத்திவருகின்றனர். ஆனால், மத்திய அரசு அக்னிபத் திட்டத்தைக் கைவிடுவதாக இல்லை என திட்டவட்டமாகக் கூறிவருகிறது. அதனால், தற்போது முப்படைகளில் அக்னிபத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தலும் தொடங்கியிருக்கிறது.

அக்னிபத் - ராணுவ ஆள் சேர்ப்பு
அக்னிபத் - ராணுவ ஆள் சேர்ப்பு

நான்கு நாள்களில் 94,000-க்கும் மேற்பட்டோர் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருப்பதாக, பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பாரத் பூஷண் பாபு நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தெலங்கானா பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவரும், எம்.பி-யுமான ரேவந்த் ரெட்டி, அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மோடியையும், பா.ஜ.க-வையும் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

கடந்த ஞாயிறு அன்று காந்திபவனில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ரேவந்த் ரெட்டி, ``மக்களவையில் உங்களிடம் (பா.ஜ.க) 300 கழுதைகள் இருக்கின்றன. அவற்றைக்கொண்டு கண்மூடித்தனமாக மசோதாவை நிறைவேற்றவைப்பீர்கள். ஆனால், அக்னிபத்-ஐ நீங்கள் திரும்பப்பெற வேண்டும். நீங்கள் எங்கும் ஓட முடியாது, மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோடி
மோடி

மேலும், வேளாண் சட்டம் கொண்டுவந்ததை, பிரதமர் மோடிக்கு நினைவுகூர விரும்புகிறேன். அப்போதும் 300 கழுதைகள் ஆதரவாக இருந்தன. ஆனால், லட்சக்கணக்கான விவசாயிகள் 16 மாதங்களாகப் போராடி, உங்களை முன்னோக்கி நகரவிடவில்லை என்பதை நினைவில்கொள்ளுங்கள். இந்தப் புதிய திட்டத்தின் மூலம் நாட்டின் இளைஞர்களை மோடி அரசு தவறாக வழிநடத்த முயல்கிறது" எனக் கூறினார்.

ரேவந்த் ரெட்டியின் இத்தகைய பேச்சுக்கு பதிலளித்த பா.ஜ.க தலைவர் ஷேஜாத் ஜெய்ஹிந்த், ``அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமரைத் விமர்சித்துவருகின்றனர். இத்தகைய செயல், ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் இதையெல்லாம் ஆமோதித்துவருகின்றனர் என்பதையே காட்டுகிறது" எனக் கூறியிருக்கிறார்.