Published:Updated:

``தயவுசெய்து ஓய்வெடுங்கள்; அவர்கள் எங்களுக்கும் தாய்" - நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு மம்தா ஆறுதல்

மம்தா பானர்ஜி - மோடி

மேற்குவங்கத்தில், நியூ ஜல்பைகுரி - ஹவுராவை இணைக்கும் வந்தே பாரத் ரயிலை காணொளிக் காட்சி மூலம் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

``தயவுசெய்து ஓய்வெடுங்கள்; அவர்கள் எங்களுக்கும் தாய்" - நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு மம்தா ஆறுதல்

மேற்குவங்கத்தில், நியூ ஜல்பைகுரி - ஹவுராவை இணைக்கும் வந்தே பாரத் ரயிலை காணொளிக் காட்சி மூலம் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

Published:Updated:
மம்தா பானர்ஜி - மோடி

உடல் நலக்குறைவு காரணமாக இரண்டு நாள்களுக்கு முன்னர் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி(99), இன்று அதிகாலை 3:30 மணியளவில் உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து இன்று காலை 9:30 மணியளவில் மோடியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

எதிர்பாரா நேரத்தில் இத்தகைய சோக சம்பவம் நிகழ்ந்தாலும் கூட, பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறும், என்றும் அதில் காணொளிக் காட்சி மூலம் மோடி பங்கேற்பார் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.

வந்தே பாரத் - காணொளிக் காட்சி மூலம் மோடி தொடங்கிவைத்தார்
வந்தே பாரத் - காணொளிக் காட்சி மூலம் மோடி தொடங்கிவைத்தார்

அதன்படி மேற்குவங்கத்தில், நியூ ஜல்பைகுரி மற்றும் ஹவுராவை இணைக்கும் வந்தே பாரத் ரயிலை காணொளிக் காட்சி மூலம் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். அதோடு பிற வளர்ச்சித் திட்டங்களையும் மோடி துவக்கிவைத்தார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ``இன்று உங்களுக்கு ஒரு சோகமான நாள். இது பெரிய இழப்பு. உங்கள் பணியை மேலும் தொடர கடவுள் உங்களுக்கு வலிமை தரட்டும். நானும் கடவுளை வேண்டிக்கொள்கிறேன். மேற்கு வங்கத்துக்கு நீங்கள் வரவிருந்தீர்கள். ஆனால் உங்கள் தாயின் மறைவு காரணமாக உங்களால் வரமுடியவில்லை. இருந்தாலும் கிட்டத்தட்ட வந்துசேர்ந்துவிட்டீர்கள். அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்குத் தாய் என்றால் எங்களுக்கும் தாய் தான். தயவுசெய்து கொஞ்சம் ஓய்வெடுங்கள்" என மோடிக்கு ஆறுதல் தெரிவித்தார்.