Published:Updated:

`டெல்லி யாருடையது.. உங்கள் வாக்கு தீர்மானிக்கும்!'- ஷாகீன் பாக் போராட்டத்தைக் குறிப்பிட்ட அமித் ஷா

அமித் ஷா
அமித் ஷா

டெல்லியில் நடக்கும் போராட்டங்கள் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் அம்மாநில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமித் ஷா சாடியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று மாணவர்களின் போராட்டத்தின்போது மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் ஜாமியா மிலியா மாணவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். மாணவர்களின் போராட்டத்தில் போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். போலீஸார் முன்னிலையில் அந்த நபர் துப்பாக்கியால் சுட்டார். இந்தச் சம்பவம் விவாதத்துக்குள்ளாகியுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் நடக்கும் போராட்டங்கள் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமித் ஷா சாடியுள்ளார்.

`டெல்லி யாருடையது.. உங்கள் வாக்கு தீர்மானிக்கும்!'- ஷாகீன் பாக் போராட்டத்தைக் குறிப்பிட்ட அமித் ஷா

டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிலவிவருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது. இந்தத் தேர்தல் பா.ஜ.க-வுக்கு சவால் அளிக்கும் வகையில் இருக்கும். தேர்தல் பிரசாரத்தின்போது பா.ஜ.க-வினர் டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் நடக்கும் போராட்டங்களைத் தொடர்ந்து எதிர்த்துப் பேசிவருகின்றனர்.

`இதோ உங்கள் சுதந்திரம்..!' - மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு; வேடிக்கை பார்த்த போலீஸ்?

இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``உங்களின் ஒரு வாக்குதான் தீர்மானிக்கப்போகிறது டெல்லி ஷாகீன் பாக் உடையதா அல்லது பாரத மாதாவின் மக்களுடையதா என்று. காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மியும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடுகின்றனர். ஷாகீன் பாக் உடன் இருப்பதாக அவர்களாக கூறுகிறார்கள். பாரதத்தைத் துண்டாக்குவோம் எனப் பேசிய ஷர்ஜீல் இமாம் நேற்று பீகாரில் கைது செய்யப்பட்டார். ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் பேசிய கன்னையா குமார் மற்றும் ஓமரை ஜெயிலில் அடைத்தோம்.

டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம்
Twitter

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அரசு அவர்களுக்கு எதிராக வழக்குகளை நடத்த அனுமதிக்க மறுக்கிறது. வாக்கு வங்கியின் பயத்தால் அவர்கள் அப்படிச் செய்கிறார்கள். கெஜ்ரிவால் உங்களிடம் நான் மறுபடியும் கேட்கிறேன், வழக்குகளை நடத்த அனுமதி அளிப்பீர்களா இல்லையா? டெல்லி மக்களின் முன்னால் கூறுங்கள்” என்றார். முன்னதாக டெல்லி துப்பாக்கிச்சூடு குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த அமித் ஷா, ``மத்திய அரசு இதுபோன்ற செயல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. இதை முக்கியமான பிரச்னையாக கருதுகிறேன். துப்பாக்கிச்சூடு நடத்திய நபருக்கு தக்க தண்டனை பெற்றுத்தரப்படும்” எனப் பதிவிட்டிருந்தார்.

பின் செல்ல