Published:Updated:

`உண்டியலில் 100 ரூபாய் போடு!' - பணம் தர மறுத்தவருக்குக் கேரள சி.பி.எம் கட்சியினரால் நேர்ந்த கொடுமை

புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குப் பணம் தராததால் இளைஞர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கம்யூனிஸ்ட் கட்சியினரால் தாக்கப்பட்ட செந்தில்
கம்யூனிஸ்ட் கட்சியினரால் தாக்கப்பட்ட செந்தில்

திருவனந்தபுரம் பாரசல்லா பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். கடந்த டிசம்பர் 31- ந் தேதி இரவில், தன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் உண்டியல் குலுக்கி வசூலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். செந்திலிடம் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக ரூ.100 உண்டியலில் போடுமாறு கேட்டுள்ளனர். அவர் கொடுக்க மறுத்துள்ளார்.

உண்டியல்
உண்டியல்
மாதிரி படம்

இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் செந்திலைத் தாறுமாறாக அடித்து உதைத்தனர். செந்தில் வலியால் துடித்தாலும் அடிப்பதை நிறுத்தவில்லை. முடிவில், அவர்கள் செய்த காரியம்தான் பதற வைத்தது. செந்திலை ரோட்டில் படுக்க வைத்து அவரின் மீது ஆட்டோவை ஏற்றியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அப்படியே, நடுரோட்டில் போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.

கைதிகள், அணுசக்தி உள்கட்டமைப்பு விவரங்களை பரிமாறிக் கொண்ட இந்தியா - பாகிஸ்தான்! ஏன்?

பின்னர், அக்கம்பக்கத்தினர் செந்திலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தற்போது, செந்தில் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கை கால்களில் அவருக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. இதுதொடர்பாக, சி.பி.எம் கிளைச் செயலாளர் பிரதீப் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

`இன்னும் கொஞ்சம் வெங்காயம் கொடு!' -கேரள ஹோட்டலை அடித்து நொறுக்கிய போதைக் கும்பல்

பிரதீப் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது. உண்டியலில் பணம் போடாத இளைஞரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்கியது கேரள மக்களை அதிர வைத்துள்ளது. இளைஞரை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.