Published:Updated:

`பாலினப் பாகுபாடு’ - இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர்மீது அஸ்ஸாமைச் சேர்ந்த அங்கிதா குற்றச்சாட்டு!

ஸ்ரீநிவாஸ் பி.வி - ராகுல் காந்தி

``அங்கிதா தத்தா, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்திருக்கிறது” - ஸ்ரீநிவாஸ் பி.வி

Published:Updated:

`பாலினப் பாகுபாடு’ - இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர்மீது அஸ்ஸாமைச் சேர்ந்த அங்கிதா குற்றச்சாட்டு!

``அங்கிதா தத்தா, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்திருக்கிறது” - ஸ்ரீநிவாஸ் பி.வி

ஸ்ரீநிவாஸ் பி.வி - ராகுல் காந்தி

இந்திய இளைஞர் காங்கிரஸின் (ஐ.ஒய்.சி) தேசியத் தலைவர் ஸ்ரீநிவாஸ் பி.வி, தன்னைத் துன்புறுத்தியதாகவும், பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டுவதாகவும் அஸ்ஸாமின் இளைஞர் காங்கிரஸ் தலைவர் அங்கிதா தத்தா குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "கடந்த ஆறு மாதங்களாக, ஸ்ரீநிவாஸ் பி.வி, அவரின் ஐ.ஒய்.சி செயலாளர் வர்தன் யாதவ் ஆகியோர் என்னைத் தொடர்ந்து துன்புறுத்திவருகின்றனர். இது குறித்து நான் தலைமையிடம் புகாரளித்தும் இதுவரை அவர்களுக்கு எதிராக எந்த விசாரணைக் குழுவும் அமைக்கப்படவில்லை.

அங்கிதா தத்தா
அங்கிதா தத்தா

இது குறித்து பல நேரங்களில் ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், பிரியங்கா காந்தி ஆகியோரை  முன்னிலைப்படுத்தி புகார் தெரிவித்தபோதிலும் தலைமை கண்டுகொள்ளவில்லை" எனத் தெரிவித்திருக்கிறார். இந்தப் புகாரைத் தொடர்ந்து, இந்திய இளைஞர் காங்கிரஸின் (ஐஒய்சி) தேசியத் தலைவர் ஸ்ரீநிவாஸ் பி.வி, அஸ்ஸாமின் இளைஞர் காங்கிரஸ் தலைவர் அங்கிதா  தத்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

அதில், "காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க-வில்  சேருவதற்குத் தயாராகும் வகையில், திட்டமிட்டு, அரசியல் உந்துதலால் பரப்பப்படும் தவறான தகவல்கள்.  அங்கிதா தத்தா, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா  சர்மாவுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்திருக்கிறது. சிறிதளவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் இவர், இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் எனக்கு எதிராகப் பேசியிருக்கிறார். அதனால்தான் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.