Published:Updated:

``இந்நாள் அமைச்சர் வீடுகளிலும் விரைவில் வருமான வரி சோதனை நடக்கலாம்” - பொன்.ராதாகிருஷ்ணன் சூசகம்

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன்.ராதாகிருஷ்ணன்
News
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் தற்போதைய அமைச்சர்கள் வீடுகளிலும் விரைவில் வருமான வரி சோதனை நடைபெற அதிக வாய்ப்பிருப்பதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர், ``தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு தற்போது போதைமயமாகிவிட்டது. நாள்தோறும் கொலை, கொள்ளை என்று தமிழ்நாடு கொலை பூமியாக மாறிக்கொண்டுவருகிறது. தமிழ்நாடு இரண்டாகப் பிரிக்கப்படும் எனக் கற்பனைக்கு அப்பாற்பட்டதைப் பரப்பிவருகின்றனர். எந்தச் சூழ்நிலையிலும் தமிழ்நாடு இரண்டாகப் பிரிக்கப்படாது. பிரிக்கக் கூடாது என்பதுதான் பா.ஜ.க-வின் கொள்கை. `ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்ற நிலை’ அ.தி.மு.க-வுக்கு வந்துவிடக் கூடாது.

செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பொன்.ராதாகிருஷ்ணன்
செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பொன்.ராதாகிருஷ்ணன்

அ.தி.மு.க-வில் உள்ள நிர்வாகிகள் சரியான முடிவை எடுத்து கட்சியைச் சரியான பாதையில் கொண்டு சென்றால் அந்தக் கட்சியின் வளர்ச்சி நன்றாக இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பா.ஜ.க கூட்டணி அ.தி.மு.க-வுடன் தொடர்ந்துவருகிறது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் எம்.பி-க்களைப் பெறுவதுதான் பா.ஜ.க-வின் நோக்கம்.

நாட்டில் ஆண்டுக்கு மூன்று தேர்தல் நடைபெற்றுவருகிறது, இதைத் தவிர்ப்பதற்காகவே ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுவருகிறது” என்றார்.

தொடர்ந்து காமராஜ் உள்ளிட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் வீடுகளில் தொடர்ந்து நடந்துவரும் சோதனை குறித்துச் செய்தியாளர்கள் கேட்டபோது,

``அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருவதைப் போன்று, தமிழ்நாட்டில் தற்போதைய அமைச்சர்களாக இருந்து வருபவர்களின் வீடுகளிலும் விரைவில் வருமான வரி சோதனை நடைபெற அதிக வாய்ப்பிருக்கிறது” எனக் கூறினார்.