Published:Updated:

`பெண் மென்பொறியாளரின் உயிரைப் பறித்த சாலை’- உடனே சீரமைக்க அரசுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

சாலை விபத்து - உயிரிழந்த ஷோபனா
News
சாலை விபத்து - உயிரிழந்த ஷோபனா

விபத்து நடந்த சாலையின் பராமரிப்பு எந்தத் துறையின் பொறுப்பு என்பது குறித்த சர்ச்சையில் நீண்டகாலமாகப் பராமரிக்கப்படவில்லை என்றும், 2020-ம் ஆண்டு அங்கு நடந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

Published:Updated:

`பெண் மென்பொறியாளரின் உயிரைப் பறித்த சாலை’- உடனே சீரமைக்க அரசுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

விபத்து நடந்த சாலையின் பராமரிப்பு எந்தத் துறையின் பொறுப்பு என்பது குறித்த சர்ச்சையில் நீண்டகாலமாகப் பராமரிக்கப்படவில்லை என்றும், 2020-ம் ஆண்டு அங்கு நடந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

சாலை விபத்து - உயிரிழந்த ஷோபனா
News
சாலை விபத்து - உயிரிழந்த ஷோபனா

சென்னையில் பெண் மென்பொறியாளர் விபத்தில் பலியானதற்கு மோசமான சாலையே காரணம் என்று கூறப்படும் நிலையில், மாநகர சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என்று, அரசுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, போரூரைச் சேர்ந்தவர் ஷோபனா (22), மென்பொறியாளர். இவர், கூடுவாஞ்சேரியில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர், தன் தம்பியை பள்ளியில் விடுவதற்காக டூவீலரில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது, மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் இருந்த பள்ளத்தில் நிலைதடுமாறி டூ வீலருடன் கீழே விழுந்தார். அந்த நேரத்தில் பின்னால் வந்துகொண்டிருந்த மணல் லாரி, அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரித்த போலீஸார் ஓட்டுநர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.

ராமதாஸ்
ராமதாஸ்

இந்நிலையில், உயிரைப் பறிக்கும் மோசமான சாலைகளை உடனே செப்பனிட வேண்டும் என்று, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ``சென்னை மதுரவாயல் அருகே புறவழிச்சாலையின் சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் தடுமாறி விழுந்த ஷோபனா என்ற மென்பொறியாளர் மீது சரக்குந்து ஏறி நசுங்கி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

விபத்து நடந்த சாலையின் பராமரிப்பு எந்தத் துறையின் பொறுப்பு என்பது குறித்த சர்ச்சையில் நீண்டகாலமாக பராமரிக்கப்படவில்லை என்றும், கடந்த 2020-ம் ஆண்டு அங்கு நடந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அரசுத் துறைகளின் அலட்சியம் உயிர்களைப் பலிவாங்கக் கூடாது. சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் ஆகியவற்றாலும், பருவமழை காரணமாகவும் சென்னையில் பெரும்பான்மையான சாலைகள் பயணிக்க முடியாத அளவுக்கு மோசமாக சேதமடைந்துள்ளன. அவை இன்னும் சீரமைக்கப்படவில்லை.

சாலை விபத்து
சாலை விபத்து
மாதிரிப்படம்

சென்னையில் சேதமடைந்த சாலைகளால் இனி ஓர் உயிர்கூட பறிபோகக்கூடாது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளையும் உடனடியாக சீரமைக்க தமிழக அரசும் மாநகராட்சியும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.