Published:Updated:

நாக்பூர்: மெட்ரோ, வந்தே பாரத் ரயில், எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

மெட்ரோவில் பயணம்
News
மெட்ரோவில் பயணம்

பிரதமர் நரேந்திர மோடி நாக்பூரில் மெட்ரோ ரயில் திட்டம், எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி வைத்தார். நாக்பூரிலிருந்து மும்பைக்கு கட்டப்படும் சாலையில் ஒரு பகுதியையும் தொடங்கி வைத்தார்.

Published:Updated:

நாக்பூர்: மெட்ரோ, வந்தே பாரத் ரயில், எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி நாக்பூரில் மெட்ரோ ரயில் திட்டம், எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி வைத்தார். நாக்பூரிலிருந்து மும்பைக்கு கட்டப்படும் சாலையில் ஒரு பகுதியையும் தொடங்கி வைத்தார்.

மெட்ரோவில் பயணம்
News
மெட்ரோவில் பயணம்

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை நாக்பூர் வந்திருந்தார். நாக்பூரில் அவரை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஆளுநர் கோஷாரி, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து முதலில் நாக்பூரில் இருந்து பிலாஸ்பூர் வரையிலான வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

டிரம்ஸ் வாசிக்கும் மோடி
டிரம்ஸ் வாசிக்கும் மோடி

அதனைத் தொடர்ந்து நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் பகுதியை தொடங்கி வைத்தார். அதோடு டிக்கெட் எடுத்து மெட்ரோ ரயிலில் சிறிது தூரம் பயணம் செய்தார். இப்பயணத்தின்போது மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்களுடன் உரையாடினார். பின்னர் மும்பையிலிருந்து நாக்பூர் வரை 701 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.55,000 கோடி செலவில் 10 மாவட்டங்களையும் இணைக்கும் விதமாக 6 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் நாக்பூரில் இருந்து ஷீரடி வரை 520 கிலோமீட்டர் தூரம் முதல் கட்டப் பணிகள் முடிந்துள்ளன. இதனையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இச்சாலைக்கு சம்ருத்தி மகாமார்க் என்று பெயரிடப்பட்டுள்ளது. இச்சாலையை தொடங்கி வைத்த பிறகு 2017-ம் ஆண்டு கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்த நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையையும் திறந்து வைத்தார். இது தவிர பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இம்மருத்துவமனைக்கும் பிரதமர் மோடிதான் அடிக்கல் நாட்டினார்.

வந்தே பாரத் தொடக்கம்
வந்தே பாரத் தொடக்கம்

இவ்விழாவில் பேசிய பிரதமர் மோடி, இரட்டை இன்ஜின் அரசு கட்டமைப்புப் பணிகளை மேம்படுத்துவதில் வளர்ச்சி கண்டிருப்பதாக தெரிவித்தார். பிரதமர் மோடிக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பின்போது டிரம்ஸ் இசைக்கப்பட்டது. இது பிரதமர் மோடியை வெகுவாக கவர்ந்தது. உடனே தானும் சிறிது நேரம் டிரம்ஸ் வாசித்தார். அனைத்து விழாவிலும் மகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் பட்னாவிஸ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இவ்விழாவை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி கோவா புறப்பட்டுச் சென்றார். அங்கு சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ள மோபா விமான நிலையத்தை திறந்து வைத்தார்.