Published:Updated:

நேரடி நெல் விதைப்பு பிரச்னைக்கு இதுதான் காரணம்; பதற்றத்தில் மயிலாடுதுறை!

போராட்டம்
News
போராட்டம்

தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி நேரடி நெல் விதைப்பு மூலம் நடவு செலவையும், தண்ணீர் சிக்கனத்தையும் ஏற்படுத்தும் நேரடி நெல் விதைப்பு முறையில் நடவு செய்ய முன் வந்தபோது அதைத் தடுக்கிறார்கள். நெல் விதைப்பு செய்த பயிர்களை மிதித்து அழிக்கிறார்கள்.

நேரடி நெல் விதைப்பு பிரச்னைக்கு இதுதான் காரணம்; பதற்றத்தில் மயிலாடுதுறை!

தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி நேரடி நெல் விதைப்பு மூலம் நடவு செலவையும், தண்ணீர் சிக்கனத்தையும் ஏற்படுத்தும் நேரடி நெல் விதைப்பு முறையில் நடவு செய்ய முன் வந்தபோது அதைத் தடுக்கிறார்கள். நெல் விதைப்பு செய்த பயிர்களை மிதித்து அழிக்கிறார்கள்.

Published:Updated:
போராட்டம்
News
போராட்டம்

மயிலாடுதுறை அருகே பருத்திகுடி கிராமத்தில், நேரடி நெல் விதைப்பு செய்ய கூலி விவசாய தொழிலாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். டி.எஸ்.பி-யுடன் தள்ளுமுள்ளில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை போலீஸார் குண்டு கட்டாகத் தூக்கி சென்று கைது செய்தனர். கைது செய்தவர்களை விடுவிக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் பல்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேரடி நெல் விதைப்பு
நேரடி நெல் விதைப்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகாவில்  மேலபருத்திகுடி கிராமம் உள்ளது. இங்கு நில உரிமைதாரர் களுக்கும், கூலி விவசாய தொழிலாளர்களுக்கும் கடந்த சில ஆண்டுகளாக விவசாய கூலி பிரச்னை நடந்து வருகிறது. இதனால் ஒருவாரத்துக்கு முன்பு ஒரு நில உரிமையாளர் தனது 2 ஏக்கர் நிலத்தில் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ளார். இதை எதிர்த்து விவசாய கூலித் தொழிலாளிகள்' அந்த நிலத்தில் இறங்கி, நெல் விதைகளை மிதித்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் மற்ற நில உரிமையாளர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் எதிர்ப்பதைத் தடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் மனு கொடுத்தனர். இதையொட்டி கடந்த 16-ம் தேதி அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ``நேரடி நெல் விதைப்பு செய்தால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்" என்று விவசாய கூலித் தொழிலாளர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தி என்ற நில உரிமையாளர் தன்னுடைய 5 ஏக்கர் நிலத்தில் நேரடி நெல் விதைப்பு செய்ய பாதுகாப்பு கோரியதால், மயிலாடுதுறை டி.எஸ்.பி வசந்தராஜ்  தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, நேரடி நெல் விதைப்பு நடைபெற்றது. இதை தடுக்க வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

டி.எஸ்.பி வசந்தராஜை போராட்டக்காரர்கள் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. டி.எஸ்.பி கையில் சிறு காயமும் ஏற்பட்டது. இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உட்பட 39 விவசாய கூலித் தொழிலாளர்களை  போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர். இதன் தொடர்ச்சியாகக் கைது நடவடிக்கையைக் கண்டித்தும், கைது செய்த போராட்டக்காரர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் மயிலாடுதுறை, திருக்கடையூர், கொள்ளிடம்  உள்ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைதானவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

விஜயகாந்த்
விஜயகாந்த்

இதுபற்றி குத்தாலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் விஜயகாந்திடம் பேசினோம்.

``குத்தாலம் ஒன்றியத்திலுள்ள பருத்திக்குடியில் சுமார் 100 தலித் குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த பிப்ரவரி 6-ம் தேதி தலித் குடும்பத்தினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த சாமி ஊர்வலத்தை மாற்று ஜாதியினர் அனுமதிக்க மறுத்துவிட்டனர். அதில் ஏற்பட்ட பிரச்னையில் மாற்று ஜாதியைதைச் சேர்ந்த ஒரு பெண் பாதிக்கப்பட்டார். கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் கொடுத்த புகாரின் பேரில், பாலையூர் காவல் நிலையத்தினர் தலித் இளைஞர்கள் 5 பேர் மீது கடுமையான சட்டங்களின்கீழ்  வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதனால் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை கொடுக்கக் கூடாது.  டீக்கடை, மளிகைக் கடையில் பொருள் வழங்கக் கூடாது' என்று வாய்மொழி உத்தரவு போட்டு மறுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து எங்கள் கட்சியினர் காவல் நிலையம் கோட்டாட்சியர் உட்பட அனைவருக்கும் புகார் தந்தோம். அமைதிப் பேச்சு வார்த்தையும் நடந்தது. அதற்கு அனைவரும் ஒப்புக்கொண்டார்கள்.

இந்நிலையில், குறுவை சாகுபடி பணியில் தலித் மக்களை பழிவாங்கும் விதமாகக் கடந்த 60 ஆண்டு காலமாக நடவு, களை எடுப்பு, அறுவடை என விவசாய பணிகள் நடந்து வரும் நிலையில், தற்போது நேரடி நெல் விதைப்பு என்ற முடிவை எடுத்து பழி வாங்குகின்றனர். இதனால் விவசாய கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எங்கள் கட்சியினர் போராட்டம் நடத்தியபோது நில உரிமையாளர் களுக்கு ஆதரவாகக்  காவல்துறை கைக்கூலியாகச் செயல்பட்டு எங்களை அடக்குமுறை செய்திருக்கிறது. விரைவில் அடுத்தகட்ட போராட்டத்தைப் பற்றி முடிவு செய்யவுள்ளோம்" என்றார்.

சேதுராமன்
சேதுராமன்

இது குறித்து நில உரிமையாளர் சார்பில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழக விவசாயிகள் நல சங்கத்தின் தலைவரான சேதுராமனிடம் பேசியபோது, ``கடந்த 20 ஆண்டு காலமாக இக்கிராமத்தில் வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளர்கள் ஏதாவது ஒரு பிரச்னையை முன்னெடுத்து விவசாயம் செய்ய விடாமல் செய்கிறார்கள். எனவேதான் தற்போதுள்ள தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி நேரடி நெல் விதைப்பு மூலம் நடவு செலவையும், தண்ணீர் சிக்கனத்தையும் ஏற்படுத்தும் நேரடி நெல் விதைப்பு முறையில் நடவு செய்ய முன் வந்தபோது அதைத் தடுக்கிறார்கள். நெல் விதைப்பு செய்த பயிர்களை மிதித்து அழிக்கிறார்கள். இதற்கு காவல்துறை, வருவாய்த்துறையின் ஒத்துழைப்பை நாங்கள் கேட்டோம். அவர்கள் பாதுகாப்பு தந்தார்கள். இதனால் மாவட்ட வருவாய் துறைக்கும் காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

இருதரப்புமே தங்கள் நிலைப்பாடுகளில் உறுதியாக இருக்கிறார்கள். இந்நிலையில் போலீஸார் பாதுகாப்புடன் நேரடி நெல் விதைப்பு பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது.