Published:Updated:

கிளர்ந்தெழுந்த லயோலா மாணவர்கள்... கிடுக்கிப்பிடி போட்ட கல்லூரி நிர்வாகம்!

கிளர்ந்தெழுந்த லயோலா மாணவர்கள்... கிடுக்கிப்பிடி போட்ட கல்லூரி நிர்வாகம்!
கிளர்ந்தெழுந்த லயோலா மாணவர்கள்... கிடுக்கிப்பிடி போட்ட கல்லூரி நிர்வாகம்!

கிளர்ந்தெழுந்த லயோலா மாணவர்கள்... கிடுக்கிப்பிடி போட்ட கல்லூரி நிர்வாகம்!

மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு, இன்று சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவ கல்லூரியில் சேர நாடு முழுவதும் நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்ததையடுத்து, கடந்த மே மாதம் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா, ப்ளீஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் எடுத்திருந்த போதிலும் தோல்வியடைந்தார். எனினும் தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் வார்த்தையை நம்பி காத்திருந்தார் அனிதா. ஆனால், உச்ச நீதிமன்றம், 'தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட மாட்டாது' என்று தீர்ப்பளித்ததையடுத்து, மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். அனிதாவின் மரணத்துக்குப் பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் மாணவர் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் இறங்கினர். கல்லூரி அமைந்துள்ள ஸ்டெர்லிங் ரோடு சாலையில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் கல்லூரி முன்னாள் மாணவர் இயக்குநர் வெற்றிமாறன், கௌதமன், ரோகிணி, ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதையடுத்து அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். காவல்துறையினரும் கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களைக் கல்லூரிக்குள் அழைத்துச் சென்று கேட்டைப் பூட்டினர். ஆனால், மாணவர்கள் உறுதியோடு கல்லூரி வாசல் முன்பு அமர்ந்து, மத்திய- மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மேலும் நீட் தேர்விலிருந்து விலக்க அளிக்கக்கோரியும் அனிதா சட்டம் இயற்ற வேண்டியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, மாணவர்களைத் தனித்தனியே அழைத்து நிர்வாகத்தினர் அவர்களைக் கல்லூரிக்கு அனுப்பினர். மேலும் உரக்க குரல் கொடுத்தவர்களிடம் அடையாள அட்டையைக் காண்பிக்கச் சொல்லி, மிரட்டல் மொழியில் அவர்களையும் கலையச் செய்தனர். ஆனால் நம்மிடம் பேசிய மாணவர்கள் சிலர், 'நிர்வாகத்தினர் தடுத்தாலும் பெருங்கூட்டத்துடன் மீண்டும் போராட்டத்தில் இறங்குவோம். அனிதாவுக்கு நீதி கிடைக்கும் வரை மாணவர்கள் நாங்கள் ஓயமாட்டோம்' என்று சூளுரைக்கின்றனர்.                        

அடுத்த கட்டுரைக்கு