Published:Updated:

நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் கொதித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி!

அஸ்வினி.சி
நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் கொதித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி!
நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் கொதித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி!

நீட் தேர்வுக்கு எதிராக புதுச்சேரியில் இன்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டார். 


 

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்றுவருகிறது. புதுச்சேரியிலும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. 

இந்நிலையில், நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் நாராயணசாமி, 'சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மத்திய அரசிடம் தூங்குகின்றன. நீட் தேர்வை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும் என்பதே காங்கிரஸின் கொள்கை. மத்திய அரசு மதவாத, பிரிவினைவாத அரசாகச் செயல்படுகிறது” என்று காட்டமாகப் பேசினார்.