Published:Updated:

'வகுப்புக்கு வாருங்கள் ஆசிரியர்களே' - திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளிக் குழந்தைகள்

'வகுப்புக்கு வாருங்கள் ஆசிரியர்களே' -  திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளிக் குழந்தைகள்
'வகுப்புக்கு வாருங்கள் ஆசிரியர்களே' - திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளிக் குழந்தைகள்

வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு ஜாக்டோ - ஜியோ போராட்டத்துக்குச் சென்ற தங்களின் ஆசிரியர்களைக் கண்டித்து, அரசுப் பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது, கல்வித் துறையைப் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியிருக்கிறது. 

'வகுப்புக்கு வாருங்கள் ஆசிரியர்களே' -  திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளிக் குழந்தைகள்

புதிய ஓய்வூதியத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி, தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பாக அரசு ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்திவருகின்றனர். திருப்பூர் மாவட்ட ஆசிரியர்கள் சாலை மறியல், ஒப்பாரி என நாள்தோறும் தங்களின் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனால், திருப்பூர், அவிநாசி, காங்கேயம், உடுமலை, தாராபுரம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாத நிலை. தினந்தோறும் பள்ளிக்குச் சென்றுவிட்டு சும்மாவே திரும்பி வருகிறார்கள் மாணவர்கள். பாடம் நடத்த ஆசிரியர் வரவில்லை என்று தொடர்ந்து கூறுவதால், மாணவர்களின் பெற்றோர்களும் கடும் அதிருப்திக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

'வகுப்புக்கு வாருங்கள் ஆசிரியர்களே' -  திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளிக் குழந்தைகள்

இந்நிலையில், ஆசிரியர்களின் போராட்டத்தைக் கண்டித்து திருப்பூரின் நெசவாளர் காலனி என்ற இடத்திலிருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் பெற்றோர்களும் திருப்பூர் புதிய பேருந்து நிலைய சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது, பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. இதுகுறித்து பேசிய பொற்றோர்களில் ஒருவர், ''சுமார் நானூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கிற இந்தப் பள்ளியில் ஒரு வாரமாகவே குறைந்த ஆசிரியர்களே வேலைக்கு வர்றாங்க. மிச்ச பேர் ஜாக்டோ - ஜியோ போராட்டத்துக்குப் போயிடறாங்க. இதனால் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஒரே இடத்துல உட்காரவெச்சு பாடம் நடத்தறாங்க. தவிர, பள்ளி நேரம் முடியறதுக்கு முன்னாடியே வீட்டுக்கு அனுப்பிடறாங்க. பரீட்சை வரவுள்ள நேரத்தில் ஆசிரியர்கள் செய்யற இந்தப் போராட்டத்தால், பிள்ளைங்களோட படிப்பு கெட்டுப்போகுது'' என்று தெரிவித்தார்.

'வகுப்புக்கு வாருங்கள் ஆசிரியர்களே' -  திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளிக் குழந்தைகள்

பள்ளிச் சீருடையுடன் வந்த மாணவர்கள் ஆசிரியர்களே பள்ளிக்கு வாருங்கள், என்று சிலேட்டில் எழுதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.