Published:Updated:

ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் காத்திருப்புப் போராட்டம்!

தி.ஜெயப்பிரகாஷ்
ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் காத்திருப்புப் போராட்டம்!
ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் காத்திருப்புப் போராட்டம்!
ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் காத்திருப்புப் போராட்டம்!

புதிய ஓய்வூதியத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பாக அரசு ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அதனடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் திருப்பூர், அவிநாசி, காங்கேயம், உடுமலை, தாராபுரம் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வரும் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர், இன்றைய தினம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் காத்திருப்புப் போராட்டம்!

காலை முதலே மாவட்ட ஆட்சியரக வளாகத்தின் ஒரு பகுதியில் பந்தல்களை அமைத்து, குழுக்களாக அமர்ந்துகொண்டு தங்களின்  கோரிக்கைகளை முழக்கமிட்டு வருகின்றனர். ஊதியம் தொடர்பான ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் தொடர் போராட்டத்தில், நீட் தேர்வு முறையை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் இன்று முதல் இணைந்திருக்கிறது. இது ஒருபுறமிருக்க, ஆட்சியரக வளாகத்தின் ஒரு பகுதியில் தற்காலிக சமையல் கூடத்தை உருவாக்கி, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ள அரசு ஊழியர்களுக்கான மதிய உணவும் தயாரிக்கப்பட்டது.