Published:Updated:

ஜாக்டோ- ஜியோ போராட்டம் முடிவுக்கு வருமா?

ஜாக்டோ- ஜியோ போராட்டம் முடிவுக்கு வருமா?
ஜாக்டோ- ஜியோ போராட்டம் முடிவுக்கு வருமா?

ஜாக்டோ- ஜியோ போராட்டம் முடிவுக்கு வருமா?

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது. 


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில் காலவரையற்ற போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்ததோடு, ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால், தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. 

நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராகினர். மேலும், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் ஆவணங்களுடன் தலைமைச் செயலாளர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, தங்களது போராட்டத்தை ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் தற்காலிகமாக வாபஸ்பெற்றனர். இந்த வழக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. தலைமைச் செயலாளார் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால், போராட்டத்தைத் தொடர உள்ளதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஏற்கெனவே அறிவித்துள்ளனர். 
 

அடுத்த கட்டுரைக்கு