Published:Updated:

போனஸ் தொகை வழங்கக் கோரி உப்பு நிறுவன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உப்பு நிறுவன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்..!
உப்பு நிறுவன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்..!

போனஸ் தொகை வழங்கக் கோரி உப்பு நிறுவன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அரசு அறிவித்த 20% போனஸ் தொகையை வழங்காத நிர்வாகத்தைக் கண்டித்து வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவன தொழிலாளர்கள் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போனஸ் தொகை வழங்கக் கோரி உப்பு நிறுவன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்..!

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் அரசுக்குச் சொந்தமான உப்பு நிறுவனம் உள்ளது. இங்கு நிரந்தர மற்றும் ஒப்பந்தம் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி போனஸாக 20% தொகையை வழங்க அரசு அறிவிப்பு செய்திருந்தது. ஆனால், உப்பு நிறுவன அதிகாரிகளோ 10% தொகையையே போனஸாக வழங்குவதாக அறிவித்தனர்.  உப்பு நிறுவன அதிகாரிகளின் இச்செயலைக் கண்டித்தும் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த முழுமையான போனஸ் தொகையை வழங்கக் கோரியும் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று கைகளில் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் சிவாஜி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் உப்பு நிறுவன தொழிற்சங்க நிர்வாகிகள் பச்சமாள், முருகவேல், திருமால் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு