Election bannerElection banner
Published:Updated:

கோவையில் கந்துவட்டிக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு

கோவையில் கந்துவட்டிக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு
கோவையில் கந்துவட்டிக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு

கோவையில் கந்துவட்டிக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு

கந்துவட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. நெல்லையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, மூன்று பேர் தீக்கு இரையான பிறகு, கந்துவட்டி கொடுமைகள் வெளிச்சத்துக்கு வரத்தொடங்கியுள்ளன.

இதுதொடர்பாக, அரசு அலுவலகங்களில் அளிக்கப்பட்ட புகார் மனுக்கள் தூசியில் மறைந்துகிடக்கின்றன. கடந்த 2003-ம் ஆண்டு, இயற்றப்பட்ட கந்துவட்டி ஒழிப்புச் சட்டம் என்ன செய்கிறது என்றே தெரியவில்லை. மூன்று உயிர்களை காவு வாங்கியப் பிறகு, கந்துவட்டிக்கு எதிராக குரல்கள் வலுத்து வருகின்றன. கந்துவட்டி ஒழிப்பு சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் கோரிக்கைகள் எழுந்துவருகின்றன. இந்நிலையில், கந்துவட்டிக்கு எதிராக கோவையும் கொதித்து வருகிறது. கந்துவட்டியை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அதேபோல, கந்துவட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக நீதிக்கட்சி சார்பில், கோவை ரேஸ்கோர்ஸ் அருகே போராட்டம் நடத்தப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டத்தின் போது, கந்துவட்டியை ஒழிக்க வேண்டும், நுண் கடன் நிதி நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும், கந்துவட்டியின் பேரில், மக்களை கொடுமைப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு