Election bannerElection banner
Published:Updated:

ஆட்சியரின் உதவியாளரைக் கண்டித்து நாகர்கோவிலில் போராட்டம்

ஆட்சியரின் உதவியாளரைக் கண்டித்து நாகர்கோவிலில் போராட்டம்
ஆட்சியரின் உதவியாளரைக் கண்டித்து நாகர்கோவிலில் போராட்டம்

ஆட்சியரின் உதவியாளரைக் கண்டித்து நாகர்கோவிலில் போராட்டம்

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய்ப் பிரிவுகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு வருவாய்துறை ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாகர்கோவில்  வட்டாட்சியர் அலுவலகத்தின் முக்கிய கட்டடத்தில் வளர்ச்சிப் பிரிவு, வருவாய்ப் பிரிவு உட்பட பல பிரிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதி, வெளியே சாலைப் பகுதி போன்ற இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய்ப் பிரிவு  A,B,C ஆகியவற்றிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதற்கு அரசு ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கண்காணிப்பு காமிராக்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மாவட்ட ஆட்சியர் சார்பாக இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளரிடம் முறையிட்டபோது, இவர்களது கோரிக்கையை உதாசீனப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. எனவே, அவரைக் கண்டித்து மாலை தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு