Election bannerElection banner
Published:Updated:

நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்த ஊராட்சி மக்கள் எதிர்ப்பு

நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்த ஊராட்சி மக்கள் எதிர்ப்பு
நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்த ஊராட்சி மக்கள் எதிர்ப்பு

நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்த ஊராட்சி மக்கள் எதிர்ப்பு

நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக மாற்றுவதற்கு, அருகில் உள்ள ஊராட்சிகளை நாகர்கோவில் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்புத் தெரிவித்து, மீனவ கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், 'நாகர்கோவில் நகராட்சியைத் தரம் உயர்த்தி மாநகராட்சியாக மாற்றுவதற்கு, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 12 ஊராட்சிகளையும், தோவாளை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 6 ஊராட்சிகளையும் இணைத்துத் தரம் உயர்த்துவதற்கான முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது. ஆனால், வறுமைக்கோட்டுப் பட்டியல், ஊரக வேலைவாய்ப்பு மானியம், பசுமை வீடுகள் போன்ற பல திட்டங்களை இழக்கவேண்டிய நிலை ஏற்படும்.

இது தவிர, வீட்டு வரி உயர்வு, நில மதிப்பீட்டு உயர்வு போன்ற பல பிரச்னைகள் ஏற்படும். மக்கள் பிரதிநிதித்துவத் தன்மையையும் கடற்கரைப் பகுதி மக்கள் இழக்கவேண்டியது வரும். மணக்குடி, பள்ளம், கேசவன் புத்தன் துறை, ராஜாக்கமங்கலம் ஊராட்சிகளுக்கான தலைமைப் பிரதிநிதித்துவம், ஒன்றிய கவுன்சிலர் பிரதிநிதித்துவம் ஆகியவை பறிக்கப்படும். மேலும், அடிப்படைத் தேவைகளான சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி போன்றவைகள் முறையாக கிடைக்காத நிலை ஏற்படும். எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த 18 ஊராட்சிகளையும் நாகர்கோவில் நகராட்சியுடன் இணைத்து மாநகராட்சியாக மாற்றும்  முடிவை மறுபரிசீலனைசெய்ய வேண்டும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு