Published:Updated:

சிறையில் உண்ணாவிரதம்! - முகிலன் முன்வைக்கும் 5 கோரிக்கைகள்

சிறையில் உண்ணாவிரதம்! - முகிலன் முன்வைக்கும் 5 கோரிக்கைகள்

சிறையில் உண்ணாவிரதம்! - முகிலன் முன்வைக்கும் 5 கோரிக்கைகள்

சிறையில் உண்ணாவிரதம்! - முகிலன் முன்வைக்கும் 5 கோரிக்கைகள்

சிறையில் உண்ணாவிரதம்! - முகிலன் முன்வைக்கும் 5 கோரிக்கைகள்

Published:Updated:
சிறையில் உண்ணாவிரதம்! - முகிலன் முன்வைக்கும் 5 கோரிக்கைகள்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சமூக செயற்பாட்டாளர் முகிலன், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். 

மக்கள் நலனுக்காகக் குரல்கொடுக்கும் சமூக செயற்பாட்டாளர், முகிலன். கூடங்குளம் அணுஉலை போராட்டம், நொய்யல் ஆறு மாசுபடுவதற்கு எதிரான நடவடிக்கை, காவிரி நதிநீர் பாதுகாப்பு, ஆற்று மணல் கொள்ளைத் தடுப்பு, தாதுமணல் கொள்ளைக்கு எதிரான செயல்பாடுகள், தாமிரபரணி தண்ணீரை பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு வழங்குவதைத் தடுப்பது, கெயில் விவகாரம், மீத்தேன் எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம் எனத் தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளில் இவரது பங்களிப்பு மகத்தானது. 

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அவர்மீது, தேசத்துக்கு எதிராகப் போர் தொடுத்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருக்கிறது. இது தொடர்பாக அவர் கைதுசெய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மீதான வழக்கு, ஐ.நா மனித உரிமை கமிஷனில் பேசச் சென்ற வைகோ மீது தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம், நெல்லையில் செய்தியாளர்கள் மீதான வழக்கு ஆகியவற்றைக் கண்டித்து ஏற்கெனவே அவர் சிறையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், இன்று காலை முதல் அவர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார். 5 கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவருகிறார். அவரது கோரிக்கைகள் வருமாறு:

1) கூடங்குளத்தில் அணுஉலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய அப்பாவி மக்கள் ஒரு லட்சம் பேர்மீது போடப்பட்ட 132 வழக்குகளையும் ரத்துசெய்ய வேண்டும்.

2) தாமிரபரணி ஆற்றிலிருந்து கோக், ஃபெஃப்சி ஆலைகள் தண்ணீர் எடுப்பதற்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்துசெய்ய வேண்டும்.

3) தாமிரபரணியில், கொங்கராய்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் புதிய மணல் குவாரிகள் அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும்.

4) வழக்கறிஞர் செம்மணியை சட்ட விரோதமாக வீட்டிலிருந்து தூக்கிச்சென்று, கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்ரோ மையம்குறித்து செய்தி வெளியிட்ட தினகரன் பத்திரிகையாளர் அந்தோணி ஜெகன், புதியதலைமுறை செய்தியாளர் ரஜீவ் கிருஷ்ணா, நாகராஜன் ஆகியோர்மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் போரடிவரும் பேராசிரியர் த.செயராமன் மீது போடப்பட்ட தேசத் துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும். அத்துடன், கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக கார்ட்டூனிஸ்ட் பாலா மீது தொடரப்பட்ட வழக்கை ரத்துசெய்ய வேண்டும்.

5) தமிழகத்தில் கெயில், ஹைட்ரோகார்பன், அணுஉலை, மணல் கொள்ளை, நிலத்தடி நீர் கொள்ளை போன்றவற்றை எதிர்த்து வாழ்வாதாரத்துக்காகப் போராடியவர்கள்மீது தொடரப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடிசெய்ய வேண்டும்.

6) திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஆய்வை தடைசெய்ய வேண்டும்  என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சமூகப் போராளியான முகிலன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism