Published:Updated:

'பத்மாவதி'க்கு மதுரையில் எதிர்ப்பு! #padmavati

'பத்மாவதி'க்கு மதுரையில் எதிர்ப்பு! #padmavati
'பத்மாவதி'க்கு மதுரையில் எதிர்ப்பு! #padmavati

இந்தியில் பிரமாண்டமாகத் தயாராகி, டிசம்பர் 1-ம் தேதி ரிலீஸாக உள்ள 'பத்மாவதி' திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடக்கூடாது என்று இந்து மக்கள் கட்சியும், ராஜபுத்திர சமூகத்தினரும் இன்று மதுரை கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.

'பத்மாவதி'க்கு மதுரையில் எதிர்ப்பு! #padmavati

இதுபற்றி நம்மிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சோலைக்கண்ணன் பேசும்போது, "சஞ்சய்லீலா பன்சாலி என்கிற இயக்குநர், ராஜபுத்திர வம்சத்தின் பேரரசியான பத்மாவதியின் வரலாற்றைப் படமாக எடுத்துள்ளார். இதில், மிகவும் மரியாதைக்குரிய ராணி பத்மாவதியை இழிவுபடுத்தும் வகையில், டெல்லியை ஆண்ட மொகலாய மன்னன் அலாவூதீன் கில்ஜியை காதலித்ததுபோல காட்டியுள்ளார். எனவே, இப்படத்தைத் தடைசெய்ய வேண்டும். சென்சார் செய்யப்பட்டாலும் ராஜபுத்திர சமூகப் பிரநிதிகளிடம் போட்டுக் காட்டி, ஆட்சேபம் உள்ள காட்சிகளை நீக்க வேண்டும், இல்லையென்றால், நாடு முழுதும் போராட்டம் நடத்துவோம்" என்றார். மதுரையில் வசிக்கும் ராஜபுத்திர சமூகத்தினரும் திரண்டுவந்திருந்தனர்.