Published:Updated:

ஓலா, ஊபருக்கு எதிராகப் பொங்கிய ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம்!

இரா.மோகன்
ஓலா, ஊபருக்கு எதிராகப் பொங்கிய ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம்!
ஓலா, ஊபருக்கு எதிராகப் பொங்கிய ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம்!

ஓலா, ஊபர் உள்ளிட்ட  கார்ப்பரேட் நிறுவன வாகனங்களின் வாடகைக் கட்டணத்தை அரசு நிர்ணயிக்கக் கோரி, ராமநாதபுரம் சி.ஐ.டி.யூ ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் வட்டார  போக்குவரத்து அலுவலகம் முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க மாவட்டச் செயலாளர் என்.பி.செந்தில் தலைமை வகித்தார். சங்கத்தின்  நிர்வாகிகள் ஏ.மாரிச்சந்திரன், டி.ராஜா, பி.பொன்னுச்சாம், பி.ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆர்.கருமலையான் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

நகரங்களில் இயக்கப்படும் ஓலா, ஊபர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டணத்தை அரசே நிர்ணயம்செய்ய வேண்டும்,ஆட்டோ தொழிலாளர்களில் எழுதப்படிக்கத் தெரிந்த அனைவருக்கும் பேட்ஜ் வழங்கிட வேண்டும். மோட்டார் வாகன சட்டத் திருத்தம் என்ற பெயரில் ஓட்டுநர் உரிமத்தைப் பறிக்கக் கூடாது, கட்டுப்பாடு இல்லாத காப்பீட்டுக்கட்டண உயர்வை வாபஸ் வாங்கிட வேண்டும், ஆட்டோ தொழிலாளர்கள்மீது காவல்துறையை ஏவும் அடக்குமுறையைக் கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

 சி.ஐ.டி.யூஅமைப்பின் மாவட்டப் பொருளாளர் எஸ்.ஏ.சந்தானம், துணைத் தலைவர் எம்.அய்யாத்துரை, ஆட்டோ சங்க மாவட்ட பொருளாளர் எம்.செந்தில் உட்பட, மாவட்டம் முழுவதிலுமிருந்து வந்திருந்த ஏராளமான ஆட்டோ தொழிலாளர்கள், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.