Published:Updated:

``மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வேணும்!” அமைச்சரை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்

கரூர் அரசு விருந்தினர் விடுதியில் இருந்த தமிழக போக்குவரத்துத்துறை  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை மாட்டுவண்டி தொழிலாளர்கள் முற்றுகையிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.     

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, 'ஆறுகளில் மணல் குவாரி நடத்தகூடாது' என்று தடை பாேட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு முழுக்க பாதியில் நிற்கும் கட்டடப் பணிகளைத் தாெடர்ந்து செய்ய ஏதுவாக எழுபது மணல் குவாரிகளை திறக்க நினைத்த தமிழக அரசின் நினைப்பில் மண் விழுந்தது. 

இந்நிலையில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மணல் அள்ளும் தாெழிலாளர்கள், 'மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்கணும். அதற்கும் தடை பாேட்டதால், கடந்த ஒருமாதகாலமாக எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கு. அதனால், இப்பாே சாேத்துக்கே தாளம் பாேடுகிறாேம். அதனால், எங்களுக்கு வண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்கணும்" என்று அரசுக்கு காேரிக்கை வைத்துவருகின்றனர். ஆனால், தமிழக அரசு அனுமதி மறுக்க, தாெடர்ச்சியாக அந்தக் காேரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு பாேராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். 

அந்த வகையில், மணல் அள்ள மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்டோர் இன்று கரூர் விருந்தினர் மாளிகையில் இருந்த பாேக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். காவல்துறையினர் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களைக் கலைந்துபாேகச் செய்தனர். போராட்டத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு