Published:Updated:

``ஜெ. மறைவுக்குப்பின் தமிழகத்தில் பாதுகாப்பில்லை!” - கவலையில் கிறிஸ்தவர்கள்

வீ கே.ரமேஷ்
ரமேஷ் கந்தசாமி
``ஜெ. மறைவுக்குப்பின் தமிழகத்தில் பாதுகாப்பில்லை!” - கவலையில் கிறிஸ்தவர்கள்
``ஜெ. மறைவுக்குப்பின் தமிழகத்தில் பாதுகாப்பில்லை!” - கவலையில் கிறிஸ்தவர்கள்

''ஜெயலலிதா  இறந்த பிறகு தமிழக அரசு மத்திய பா.ஜ.க.வோடு கைகோத்து ஆட்சி செய்துவருகிறது. தமிழ்நாட்டில் மறைமுக மதவாத பா.ஜ.க., அரசுதான் செயல்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை. தொடர்ந்து அச்சத்துக்குள்ளாகி வருகிறோம். காவல்துறையும், அதிகாரிகளும் மதவாத சக்திகளுக்கு துணை போகிறார்கள்'' என்று ஈரோடு பிஷப் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் எஸ்.பி., அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதுபற்றி அகில இந்திய கிறிஸ்துவ வாலிபர்கள் முன்னேற்ற இயக்கத்தின் நிறுவனர் ஜோஸ்வா ஸ்டீபன், ``மத்தியில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமூகம் மிகவும் ஒடுக்கப்படுவதோடு எங்களுக்குத் தொடர் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் இவர்களின் ஆதிக்கம் செலுத்த முடியாமல் இருந்ததால், தமிழக சிறுபான்மை மக்கள் அச்சம் இல்லாமல் வாழ்ந்தோம்.

ஜெயலலிதா இறந்தபிறகு தமிழக அரசு, மத்திய பி.ஜே.பி அரசோடு கைகோத்து செயல்படுவதால், தமிழகத்தில் மறைமுகமாக மதவாத பி.ஜே.பி. ஆதிக்கம் செலுத்திவருகிறது. தமிழக சிறுபான்மை சமூகத்தை அழித்து ஒழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேவாலயங்கள், திருச்சபைகள், சுயாதீனமாக செயல்பட்டு வரும் ஜெப வீடுகள் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. தொடர் மிரட்டல்களும் விடுத்துவருகிறார்கள்.

கோவை பெரியநாயக்கன்பாளையத்துக்கு அருகே வீரபாண்டி பிரிவில் 8 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஜெபவீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் சுயாதீனமாக நடைபெற்றுவந்த ஜெபவீட்டுக்குள் புகுந்து போதகரை தாக்கி இருக்கிறார்கள். காவல்துறையிடம் புகார் கொடுத்தால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தேவையில்லாமல் எங்களுக்கு உளவியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கிறார்கள். அரசு அதிகாரிகளும் பி.ஜே.பி.,க்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். இதனால் நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டு இருக்கிறோம்'' என்றார்.