Published:Updated:

போலீஸ் தாக்குதலுக்கு எதிராகக் களமிறங்கிய கம்யூனிஸ்டுகள்!

போலீஸ் தாக்குதலுக்கு எதிராகக் களமிறங்கிய கம்யூனிஸ்டுகள்!
போலீஸ் தாக்குதலுக்கு எதிராகக் களமிறங்கிய கம்யூனிஸ்டுகள்!
சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் சி.பி.எம் மாவட்டச் செயலாளர் கந்தசாமி, போலீஸாரால் கொடூரமாகத்  தாக்கப்பட்டதைக் கண்டித்து, ஒன்றியச் செயலாளர் திருநாவுக்கரசு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.        
போலீஸ் தாக்குதலுக்கு எதிராகக் களமிறங்கிய கம்யூனிஸ்டுகள்!
ஆண்கள், பெண்கள் என கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள்.  அப்போது பேசியவர்கள், " தீண்டாமைக்கு எதிராக, மத நல்லிணக்கத்துக்கு ஆதரவாகப் போராடக்கூடியவர்தான் கந்தசாமி. உருவாட்டி கிராமம், இந்திரா நகர், கஞ்சிப்பட்டி போன்ற கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை நடந்தபோது, அதை எதிர்த்து களத்தில் போராடியவர் கந்தசாமி. மனித உரிமை மீறல்கள், இந்தியத் தண்டனைச் சட்டம் எல்லாம் காவல்துறைக்கு மாற்றி எழுதப்படவில்லை என்பது நினைவு இருக்கட்டும். காவல்துறை, சமீபகாலமாக அதன் மதிப்பை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருக்கிறது. அடித்தட்டு மக்களுக்கு குரல் கொடுப்பதுதான் எங்களுக்கு வேலை“ என்று ஆவேசமாகப் பேசினார்கள்.