Published:Updated:

பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராகத் திருப்பூரில் 46 இடங்களில் சாலை மறியல்..!

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 46 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராகத் திருப்பூரில் 46 இடங்களில் சாலை மறியல்..!

தமிழக அரசால் உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணம், மாநிலம் முழுவதும் பொதுமக்களிடையே பலத்த எதிர்ப்பை உண்டாக்கியது. இதனால் ஆங்காங்கே சில எதிர்க்கட்சிகளும் கல்லூரி மாணவர்களும் மற்றும் சில சமூக நல அமைப்புகளும் தமிழக அரசைக் கண்டித்து ஆர்பாட்டங்களை நடத்தினர். இதுபோன்ற எதிர்ப்புகளைச் சமாளிக்கும் பொருட்டு, தமிழக அரசு மீண்டும் பேருந்துக் கட்டணங்களை மாற்றியமைத்தது. ஆனால், மாற்றியமைக்கப்பட்ட கட்டண விவரம், தற்போது மேலும் சர்ச்சைகளை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும், அதை மீண்டும் மாநில அரசு திரும்பப் பெறவேண்டும் என்பதை வலியுறுத்தியும் தி.மு.க சார்பில் இன்று தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில் 46 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாநகரில் மட்டும் 8 இடங்களில் சாலை மறியல் நடைபெற்றிருக்கிறது. தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்ற இப்போராட்டத்தில், 300 பெண்கள் உட்பட மொத்தம் 3,800 பேர் கைது செய்யப்பட்டு பல்வேறு மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு