Published:Updated:

’’ஆட்சியாளர்கள் அங்காடித் தெரு ஊழியர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்’’ - போராட்டத்தில் கொந்தளித்த ச.ம.க

வீ கே.ரமேஷ்
VIJAYAKUMAR M

பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து, உடனடியாகக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தியும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பாக சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரே போராட்டம் நடைபெற்றது. 

’’ஆட்சியாளர்கள் அங்காடித் தெரு ஊழியர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்’’ - போராட்டத்தில் கொந்தளித்த ச.ம.க

போராட்டம் குறித்து சேலம் மேற்கு மாவட்டச் செயலாளரும், மாநில உயர் மட்டக் குழு உறுப்பினருமான மைக்கேல் தங்கராஜ் பேசுகையில், ''ஏழைத் தொழிலாளிகள் பயணிக்கும் வாகனமாக பேருந்து இருந்து வருகிறது. அப்படி இருக்கும்போது பேருந்துக் கட்டணங்களை உயர்த்தியிருப்பது அடித்தட்டு மக்களை மிகவும் பாதித்துள்ளதோடு, அவர்களுடைய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

யானைப் பசிக்கு சோளப்பொறி வைத்ததுபோல ஒரு கி.மீட்டருக்கு 5 ரூபாய்க்கு மேல் உயர்த்திவிட்டு, தற்போது 1 ரூபாய் குறைத்திருப்பது கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். கிராமப்புறங்களிலிருந்து நகர்ப் புறங்களுக்கு வேலைக்குச் செல்லும் ஜவுளிக்கடை, வெல்டிங் பட்டறை, சுமை தூக்கும் தொழிலாளர்கள், வெள்ளிப்பட்டறை தொழிலாளர்கள் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மாதம் ரூ.4 ஆயிரம் சம்பளம் வாங்கக் கூடிய அங்காடித் தெரு ஊழியர்கள், மாதப் போக்குவரத்துக் கட்டணத்திற்கே 2,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றால் ஆட்சியாளர்கள் அவர்களின் குடும்பங்களை நினைத்துப் பார்க்க வேண்டும். இதனால் ஆளும் அ.தி.மு.க. அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். உடனே பேருந்துக் கட்டணத்தைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் எங்க தலைவரின் ஆலோசனைப்படி தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்'' என்றார்.