Published:Updated:

’’உரிமைகள் அனைத்தும் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் இருக்கிறார்கள்!’’ - போராட்டத்தில் கொதித்த பி.ஆர்.பாண்டியன்

எம்.கணேஷ்

தேனி மாவட்டம் பங்களாமேட்டில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு மாவட்டத்தின் அனைத்து விவசாய சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது, அணையின் பாதுகாப்பை மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மேலும், அணையைப் பார்வையிட வந்த மத்தியத் தொழில்பாதுகாப்புப் படையின் துணை கமாண்டோவை திருப்பி அனுப்பிய கேரள அரசிற்கும் உண்ணாவிரதத்தின்போது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

’’உரிமைகள் அனைத்தும் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் இருக்கிறார்கள்!’’ - போராட்டத்தில் கொதித்த பி.ஆர்.பாண்டியன்

உண்ணாவிரதத்தில் பேசிய பி.ஆர். பாண்டியன், "தற்போது நடைபெற்று வரும் எடப்பாடி − பன்னீர்செல்வத்தின் தலைமையிலான அரசு ஒரு கையாலாகாத அரசாகத்தான் உள்ளது. மறைந்த ஜெயலலிதா, முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பெற்றுத்தந்த உரிமைகள் அனைத்தும், தற்போது ஆளும் அரசால் பறிபோய்விடுமோ என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் உருவாகியுள்ளது" என்றார். முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்புப் பாசன விவசாயிகள் குழு, 18-ம் கால்வாய் விவசாயிகள் சங்கம் உள்ட பல விவசாய சங்கங்கள் இந்த உண்ணாவிரத்தில் கலந்து கொண்டனர்.