Published:Updated:

'தண்ணீர்  வேண்டும்'- சாலையில் படுத்து விவசாயிகள் மறியல்

'தண்ணீர்  வேண்டும்'- சாலையில் படுத்து  விவசாயிகள் மறியல்
'தண்ணீர்  வேண்டும்'- சாலையில் படுத்து விவசாயிகள் மறியல்

'தண்ணீர்  வேண்டும்'- சாலையில் படுத்து விவசாயிகள் மறியல்

மதுரை மேலூர் பகுதியில் ஒரு போக பாசனத்துக்கு  முறையாகத் தண்ணீர் தரவேண்டிய நீரை, அரசு வழங்கவில்லை எனக் கூறி சில மாதங்களுக்கு முன் ஒருபோக விவசாயிகள் போராட்டம் நடத்தியது பரபரப்பு ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பெயரில் தண்ணீர் வழங்கப்பட்டது. இந்த நிலையில், மதுரை பேரணை முதல்  கள்ளந்திரி வரை இரு போக விவசாயத்துக்கு வைகையிலிருந்து தண்ணீர் திறக்கக் கோரி மதுரை தமுக்கம் பகுதியில் ஊர்வலமாக வந்தனர். அதற்கு முன்னதாக கோரிப்பாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரசு ராஜாஜி மருத்துவமனை அருகிலேயே இருப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அந்தப் பகுதியில் அடிக்கடி ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வருவதால் அதனைப் புரிந்துகொண்ட விவசாயிகள் அங்கு இருந்து மீண்டும் ஊர்வலமாக வந்து மதுரை தமுக்கம் மைதானத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்குவந்த பொதுப்பணித் துறையின் செயற்பொறியாளரோ, 'தண்ணீர் இல்லாத காரணத்தினாலே தண்ணீர் திறந்துவிட முடியவில்லை. உங்கள் கோரிக்கையை அரசுக்குத் தெரிவித்துள்ளோம். மூன்று நாள்களில் முடிவு காணப்படும்' எனத் தெரிவித்தார். காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளைக் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அவர்களுக்குக் காவல்துறையினர் உணவு வழங்கினர். உணவைச் சாப்பிட விவசாயிகள் மறுத்துவிட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு