Published:Updated:

இறால் பண்ணைகளுக்கு எதிராக ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம்..!

இறால் பண்ணைகளுக்கு எதிராக ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம்..!
இறால் பண்ணைகளுக்கு எதிராக ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம்..!

 ராமேஸ்வரம் தீவின் நிலத்தடி நீர் மற்றும் குடிநீர் ஆதாரங்களை பாழ்படுத்திவரும் இறால் பண்ணைகளை அகற்றக் கோரி தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்கத்தினர் மற்றும் 12 கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் தீவின் நிலத்தடி நீர் மற்றும் குடிநீர் ஆதாரங்களைப் பாழ்படுத்தி வரும் இறால் பண்ணைகளை அகற்றக் கோரி தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்கத்தினர் மற்றும் 12 கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் பகுதியானது கடல் நீரால் சூழப்பட்ட தீவுப் பகுதியாக இருந்தாலும், தீவுக்குள் உள்ள நிலப்பரப்புகளிலும் கடற்கரையோரப் பகுதிகளிலுமிருந்து நல்ல தண்ணீர் கிடைத்து வருகிறது.

இதனால் இங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை. இந்த நன்னீருடன் காவிரி குடிநீரும் கிடைத்து வருகிறது. ஆனால், இந்தக் குடிநீரை முறையாக விநியோகிப்பதில் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால் பல்வேறு பகுதிகளில் குடிநீரை மக்கள் விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. இந்நிலையில் சமீப காலமாக ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் அதிகரித்து வரும் இறால் பண்ணைகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் 12 கிராமங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரமும் பாதிப்புக்குள்ளாகிவருகிறது. வடகாடு, சம்பை, மாங்காடு, அரியான்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் தேக்கப்பகுதிகளுக்கு மத்தியில் இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும் கடல் மற்றும் கரையோரங்களில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கலக்கிறது. இதனால் தீவின் நீர் ஆதாரங்கள் பாதிப்படைவதுடன், கரையோர மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களின் வாழ்வாதாரமும் அழிவுக்குள்ளாகி வருகிறது.

இதைக் கண்டித்தும் ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் உள்ள இறால் பண்ணைகளை அகற்ற வலியுறுத்தி தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்கத்தினர் மற்றும் 12 கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் இன்று ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தினுள் காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மீன்பிடி தொழிற்சங்க தாலுகா செயலாளர் ஜஸ்டின் தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் காசிநாததுரை, கருணாகரன், கருணாமூர்த்தி, என்.பி.செந்தில் மற்றும் பாதிப்புக்குள்ளாகி வரும் 12 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் தங்கள் குடும்பத்துடன் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு