Published:Updated:

`வழக்கறிஞர் வாஞ்சிநாதனை விடுதலைசெய்யுங்கள்!’ - ஆர்ப்பாட்டத்தில் குதித்த வழக்கறிஞர்கள்

அருண் சின்னதுரை

வழக்கறிஞர் வாஞ்சிநாதனை விடுதலைசெய்யக் கோரி மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

`வழக்கறிஞர் வாஞ்சிநாதனை விடுதலைசெய்யுங்கள்!’ - ஆர்ப்பாட்டத்தில் குதித்த வழக்கறிஞர்கள்
`வழக்கறிஞர் வாஞ்சிநாதனை விடுதலைசெய்யுங்கள்!’ - ஆர்ப்பாட்டத்தில் குதித்த வழக்கறிஞர்கள்

வழக்கறிஞர் வாஞ்சிநாதனை விடுதலைசெய்யக் கோரி,  மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு  சட்ட ஆலோசகராக இருந்த மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த வாரம் சென்னை விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில், வாஞ்சிநாதனின் மனைவி நந்தினி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல்செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, வாஞ்சிநாதன் மீது தேசிய பாதுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யக் கூடாது என்றும், தற்போதைய நிலையைத் தொடர வேண்டும் எனவும் கூறி, வழக்கை ஜூலை 5-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்நிலையில், மக்களுக்கான சட்ட ஆலோசகராக இருந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதனை தமிழக அரசு விடுதலைசெய்யக் கோரியும் , அவர் மீதும், தூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீதும் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தியும், இன்று மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது