Published:Updated:

``நிலத்திலிருந்து பிடுங்கி எறிஞ்சிட்டா எங்க உயிர் போயிடும்!'' - அரூர் விவசாயி ஏழுமலை

``நிலத்திலிருந்து பிடுங்கி எறிஞ்சிட்டா எங்க உயிர் போயிடும்!'' - அரூர் விவசாயி ஏழுமலை

நில நடுக்கம் வருதுல்லம்மா. அதைக் கண்டுபிடிக்கிறதுக்கு அரசு ஏற்பாடு பண்ணுதுன்னு’ சொல்லியிருக்காங்க. படிக்காதவங்கதான் நாங்க... ஆனா, இவ்வளவு மோசமான பொய்யையும் சொல்லி இந்த கவர்மென்ட் எங்கள அசிங்கப்படுத்த வேண்டாம்” என்றார்.

``நிலத்திலிருந்து பிடுங்கி எறிஞ்சிட்டா எங்க உயிர் போயிடும்!'' - அரூர் விவசாயி ஏழுமலை

நில நடுக்கம் வருதுல்லம்மா. அதைக் கண்டுபிடிக்கிறதுக்கு அரசு ஏற்பாடு பண்ணுதுன்னு’ சொல்லியிருக்காங்க. படிக்காதவங்கதான் நாங்க... ஆனா, இவ்வளவு மோசமான பொய்யையும் சொல்லி இந்த கவர்மென்ட் எங்கள அசிங்கப்படுத்த வேண்டாம்” என்றார்.

Published:Updated:
``நிலத்திலிருந்து பிடுங்கி எறிஞ்சிட்டா எங்க உயிர் போயிடும்!'' - அரூர் விவசாயி ஏழுமலை

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை அமைக்கப்படவிருக்கிறது. சென்னை - சேலத்துக்கான பயண நேரத்தைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம் எனச் சொல்லப்படுகிறது. 277.3 கி.மீ தூரத்துக்குச் சாலை அமைக்கப்போகிறார்கள். 

சென்னையிலிருந்து அரசுப் பேருந்தில் புறப்பட்டு தருமபுரியில் இறங்கி, மறுபடி அரூர் செல்வதற்கான அரசுப் பேருந்துக்காகக் காத்திருந்த நேரம் மட்டும், சரியாக 52 நிமிடம். அரூர் பேரூராட்சியில் இறங்கி, பாப்பிரெட்டிப்பட்டிக்கு ஒரு சிற்றுந்து கிடைத்தது. தன் மூன்று ஏக்கர் நன்செய் நிலத்தையும் கிணற்றையும் அளவீடு செய்து முடித்திருப்பதால், கலக்கத்துடன் உட்கார்ந்துகொண்டிருந்த கெளரியைச் சந்தித்தோம்.

கெளரி, பால் வியாபாரி, விவசாயி; கூட்டுக் குடும்பத்தின் மருமகள். தனது இரண்டாவது குழந்தையின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிறைமாதக் கர்ப்பிணி. ``எனக்குக் கல்யாணமாகி நாலு வருஷமாச்சு. எங்க வீட்டுல ஆதியாதியா இந்த நெலத்துலதான் பொழப்பு. நிலத்துக்குப் பக்கத்துலேயே வீடும் இருக்கு. கல் நட வந்தன்னிக்கு நாங்க யாரும் இல்லை. எங்க மாமியார் மட்டும்தான் இருந்தாங்க. `என்னையா இப்படிக் கல் நடுறீங்க... யார் நீங்கள்ளல்லாம்?'னு கேட்டதுக்கு, `நிலநடுக்கம் வருதுல்லம்மா. அதைக் கண்டுபிடிக்கிறதுக்கு அரசு ஏற்பாடு பண்ணுது'னு’ சொல்லியிருக்காங்க. படிக்காதவங்கதான் நாங்க... ஆனா, இவ்வளவு மோசமான பொய்யைச் சொல்லி இந்த கவர்மென்ட் எங்கள அசிங்கப்படுத்த வேணாம்” என்றார்.

இந்தத் திட்டம்குறித்து, அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்களா? இழப்பீடுகுறித்து தகவல்களை அளித்தார்களா? என்னும் கேள்விகளுக்கு பதிலளித்தார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் அரூர் ஒன்றியத் தலைவர் கே.என் ஏழுமலை. இவரின் நிலமும், எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்காக அளவிடப்பட்ட பகுதிக்குள்தான் வருகிறது.

``நிலங்கள்தான் இங்கு வாழ்வாதாரம். இங்கே தொழிற்சாலைகளும், வேற தொழில் வாய்ப்புகளும் கிடையாது. இந்த வேலையை விட்டுவிட்டால் நாங்கள் நாதியில்லாதவர்களாகிவிடுவோம். போலீஸ்காரர்கள் கும்பலாக வந்து, ஒரு தடைச் சங்கிலியை உருவாக்கிவிடுகிறார்கள். மக்களையெல்லாம் கிரிமினல் மாதிரி நடத்தி, அளவீட்டுக் கல்ல நட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறார்கள்” என்றார்.

`எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு இருந்தால் தெரிவிக்கலாம்' என்று கடந்த மாதம் இறுதி வாரத்தில் தருமபுரி விவசாயிகளிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாதம் 4-ம் தேதி பேரணியாகத் திரண்டு, எதிர்ப்பைப் பதிவுசெய்து மனுக்களைக் கொடுக்கச் சென்ற விவசாயிகளை ஆங்காங்கே தடுத்து நிறுத்தி, போலீஸார் கடுமையாக நடந்துகொண்டதாகக் குற்றம்சாட்டுகிறார் ஏழுமலை. அதன்பிறகும், விவசாயிகளின் தொடர் முயற்சியால் மனுக்கள் பெறப்பட்டன.

``மனு வாங்கிவைத்து மட்டும் ஒண்ணும் செய்ய முடியாது என்பதுபோன்ற தொனியில்தான், ஆட்சியர் அலுவலகத்தில் நடந்துகொண்டனர். இங்கே யாரும் பெரும்பணக்கார விவசாயிகள் அல்லர். ஐந்து ஏக்கருக்குள் நஞ்செய், புஞ்சை நிலத்தை வைத்து, கால்நடைகளை வளர்த்து தன்னையும், தான் குடும்பத்தையும் காப்பாற்றிவரும் சாதாரணமானவர்கள்தான். இங்கே எல்லோருக்கும் நிலம்தான் ஆதாரம். நிலத்திலிருந்து எங்களைப் பிடுங்கி எறிந்துவிட்டால், உயிர் போயிடும் எங்களுக்கு” என்கிறார் அழுத்தமாக.  

அரூர் வட்டம், பொன்னேரி ஊராட்சியின் எம்.தாதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மங்கையின் வீடும், வீட்டைச் சுற்றிய இரண்டு ஏக்கர் நிலமும் அளவிடப்பட்டுவிட்டன.

``பசுமையா இருக்கிற இடத்துல எதுக்குங்க தார் ஊத்தப்போறீங்க? எங்களுக்கு எந்த வசதியும் வேண்டாம். ஏற்கெனவே இருக்கிற ரோடே காலியாத்தான் கெடக்குது. எல்லாப் பச்சையும் புடுங்கிப் போட்டுட்டு எதுக்குப் பசுமை வழிச்சாலை? வீட்டுல ஒரு துக்கத்துக்குப் போயிருந்த அரவமில்லாத நேரத்துல வந்து, கல்ல நட்டுட்டுப் போயிருக்காங்க. 

விவசாய நிலத்துக்குத் தண்ணி வசதி பண்ணி தர்றதுக்கு இப்படி வேலை செஞ்சிருந்தா பரவாயில்ல. எங்க பொழப்புல மண் அள்ளிப் போடுறதுக்கு எதுக்கு இவ்வளவு அவசரம்? விவசாயிங்கன்னா அவ்வளவு கேவலமாப் போச்சா? சோறு எப்படிங்க கிடைக்கும் உங்களுக்கு? இந்த ரோடு வேணாம்... எங்களைத் தாண்டித்தான் எங்க நிலத்தக்கொண்டுபோக முடியும்” என்றார். 

`தேசம் என்பது மண்ணல்ல... மனிதர்கள்' என்னும் ஆந்திரக் கவிஞர் குரஜாட வெங்கட அப்பாராவின் வரிகள் நினைவுக்குவந்தன.