Published:Updated:

`எதிர்ப்பைக் கூட பதிவு செய்ய முடியவில்லை!’ - ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாணவர்கள் அமைப்பினர் வேதனை

`எதிர்ப்பைக் கூட பதிவு செய்ய முடியவில்லை!’ - ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாணவர்கள் அமைப்பினர் வேதனை
`எதிர்ப்பைக் கூட பதிவு செய்ய முடியவில்லை!’ - ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாணவர்கள் அமைப்பினர் வேதனை

மக்களின் பல்வேறு போராட்டங்ளுக்குப் பிறகு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு கடந்த மே மாதம் உத்தரவிட்டது. தமிழக அரசின் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி முன்னாள் தலைமை நீதிபதி தருண் குழு அறிக்கை சமர்ப்பித்தது. இதை ஏற்றுக்கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயமானது கடந்த டிசம்பர் 15-ம் தேதி அனுமதி அளித்தது. இதற்குப் பலரும் தங்களது எதிர்வினைகளைத் தெரிவித்து வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பினரும் 'ஸ்டெர்லைட் ஆலையை மூட சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்; ஜனநாயக வழியிலான போராட்டங்களை தமிழக அரசு தடுக்கக் கூடாது’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

`எதிர்ப்பைக் கூட பதிவு செய்ய முடியவில்லை!’ - ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாணவர்கள் அமைப்பினர் வேதனை

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ், ``தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தற்போது காவல்துறையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பின் அடைப்பிடையில் ஆலையைத் தொடங்க எல்லா ஏற்பாடுகளும் நடந்துவருகிறது. இதற்கிடையில் சிறு எதிர்ப்பைக்கூடத் தெரிவிக்காத நிலையில் மக்களும், மாணவர்களாகிய நாங்ளும் தள்ளப்பட்டுள்ளோம். அமைதி முறையில் உள்ளிருப்புப் போராட்டமாகவோ அல்லது சிறிய கறுப்புத் துணி அணிந்து எதிர்ப்பைத் தெரிவிக்கக்கூட எங்களால் முடியவில்லை. அவர்களை மீறிச் செயல்படும்போது 'பொய்வழக்குகளில் உங்களைக் கைது செய்வோம்' என்று தனிப்பட்ட முறையில் மிரட்டுகிறார்கள். 

எங்கள் கல்லூரியின் முதல்வர் மாணவர்களை அழைத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து எச்சரிக்கின்றனர். 144 தடை சட்டம் அமலில் இல்லாமலேயே தூத்துக்குடியில் அப்படியான சூழல்தான் நிலவி வருகிறது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுக்கு எதிராக எந்த விசாரணையும் இல்லை. பாதிக்கப்படும் மக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. ஆனால், பாதிப்புக்குள்ளாக்கும் ஆலைகளுக்கு அரசு முழுபாதுகாப்பும் அளிக்கிறது. இந்த நிலையில் தமிழக மாணவர்கள் எல்லாரிடமும் இந்தப் பிரச்னையைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.    

`எதிர்ப்பைக் கூட பதிவு செய்ய முடியவில்லை!’ - ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாணவர்கள் அமைப்பினர் வேதனை

  
தமிழக அரசு சட்டமன்றத்தில் தாமிர உருக்கு ஆலைக்குத் தமிழகத்தில் இனி அனுமதி இல்லை எனக் கொள்கை முடிவெடுத்து, சிறப்பு சட்டமியற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடுவது மக்களின் ஜனநாயக உரிமை, அடிப்படை உரிமை, எனவே தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ள போலீஸாரை திரும்பப் பெற வேண்டும். ஜனநாயக வழியிலான போராட்டங்களை அரசு தடுக்கக் கூடாது. இதற்குத் தமிழக மாணவர்களும், மாணவர் அமைப்புகளும், கட்சிகளும், இயக்கங்களும் குரல்கொடுக்க வேண்டும்" என்று கூறினார்.

இம்மாணவர் அமைப்பினருடன் செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் கௌதமன், பேராசிரியர். சிவகுமார் மற்றும் பல மாணவர்களும் கலந்துகொண்டனர்.