Published:Updated:

`அரசு வஞ்சிக்கிறது!’ - போராட்டத்தில் குதித்த மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர்கள்

`அரசு வஞ்சிக்கிறது!’ - போராட்டத்தில் குதித்த மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர்கள்
`அரசு வஞ்சிக்கிறது!’ - போராட்டத்தில் குதித்த மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர்கள்

தமிழக மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தம் செய்யக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திவரும் நிலையில், மதுரையைச் சேர்ந்த ஒப்பந்தப் பணியாளர்கள் மதுரை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த ஊழியர்கள் கூறுகையில், ``தமிழ்நாடு மின் வாரியத்தில் தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் பணி செய்துவருகிறோம். இந்த நிலையில், ஒப்பந்த ஊழியர்களை பல ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் வஞ்சிக்கப்பட்டுவருகிறது மின்சார வாரியம். தொடர்ந்து மின்வாரிய அமைச்சர் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படும் என தெரிவித்தார். அவை அனைத்தும் வாய் வார்த்தைகளாவே இருந்துவருகிறது. தற்போது கஜா உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின்போது தற்போதைய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஒப்பந்த ஊழியர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யப்படும் என உறுதி அளித்து பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

ஆனால், இதுவரை எந்த ஒரு உறுதியான அறிவிப்பும் வெளியிடாமல் கண்துடைப்புப் பணிகளை மட்டும் செய்கிறார். கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதியில் மின் வேலை தெரியாத பணியாளர்களைக் கொண்டு பணி செய்யப்படுகிறது. இதனால் விபத்துகள் நடக்கும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, ஒப்பந்தப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யும் அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டங்கள் நடத்துவோம் என தெரிவித்தனர். மதுரையில் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கஞ்சிகாச்சும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.