Published:Updated:

`தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்' - காமராஜ் உறுதி!

`தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்' - காமராஜ் உறுதி!
`தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்' - காமராஜ் உறுதி!

திருவாரூரில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அரசின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் முதல் நாகப்பட்டினம்  மாவட்டம் கரியாப்பட்டினம் வரை 244 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எடுக்கப்படும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 தினங்களுக்கு மேலாக விவசாயிகள், பொதுமக்கள் பல்வேறு கட்சியினர் போராட்டம் ஆர்பாட்டம் என தொடர்ச்சியாக நடத்திவருகின்றனர். இந்த நிலையில் திருக்காரவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எடுக்க அனுமதி அளிக்கக் கூடாது என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக திருக்காரவாசல் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் இரவு நேரங்களில் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் காவல்துறையினர் இரவு நேரத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என வலியுறுத்தி  போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இரவோடு இரவாக கைது செய்தனர்.  இருந்தபோதிலும்  விவசாயிகள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடைசெய்ய வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட துவங்கினர். 

அப்போது தமிழக அரசின் சார்பில் அமைச்சர் காமராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ் பேச்சுவார்த்தை நடத்தினர். ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் காமராஜ் அவர்களிடம் உறுதி அளித்தார் அதனைத் தொடர்ந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட திருக்காரவாசல் கிராம மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நடைமுறைபடுத்த மாட்டோம் என முதலமைச்சர் தங்க கிராம மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் அது வரைக்கும் எங்களுடைய போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.